பீரோ, நகைப்பெட்டி, வீட்டுப் பத்திரம்: சமந்தாவின் வீட்டில் எதையும் விட்டுவைக்காத ஐ.டி. அதிகாரிகள்
சென்னை: வருமான வரித்துறையினர் நடிகை சமந்தாவின் வீட்டில் இருந்த சொத்து பத்திரம் முதல் அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சமந்தா. டோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அவர் தற்போது கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சமந்தாவின் வீடுகளில் நேற்றும், இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சமந்தாவின் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தியுள்ளனர். வீட்டில் இருந்த பீரோக்களை திறந்து காட்டுமாறு கூறியுள்ளனர். பீரோவில் இருந்த நகைப் பெட்டிகளை திறந்து பார்த்து ஆய்வு செய்துள்ளனர்.
வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். வீட்டில் இருந்த ஆவணங்கள் தொடர்பாக சமந்தாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று சமந்தாவின் வீட்டில் சோதனை நடந்தபோது அங்கு வந்த பத்திரிக்கையாளர்களை அவரின் தாய் திட்டி அனுப்பினார், சகோதரரோ அடிக்கப் பாய்ந்தார். ஆனால் அவரின் தந்தை பொறுமையாக நிலைமையை எடுத்துக் கூறினார்.
இன்று சமந்தாவின் வீடு மட்டுமல்லாமல் விஜய், நயன்தாரா ஆகியோரின் வீடுகளிலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications