பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள்... அப்ப சாணி, உரம்னு தினகரன் சகட்டுமேனிக்கு உளறியது இதற்குதானா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள்....சாணி, உரம் இருந்ததா?- வீடியோ

  புதுவை: புதுவை பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள் இருந்ததால்தான் அங்கே போனால் சாணிதான் கிடைக்கும்.. உரம்தான் கிடைக்கும்... ஏதாவது வைத்துவிட்டு பழிபோடுவார்கள் என சகட்டுமேனிக்கு செய்தியாளர்களிடம் தினகரன் உளறினாரா? என்கிற கேஎள்வி எழுந்துள்ளது.

  தினகரனின் சென்னை வீடு தவிர, சசிகலா சிறைவாசம் அனுபவிக்கும் பரப்பன அக்ரகார சிறையைத் தவிர அந்த குடும்பத்தின் அத்தனை உறவினர்களையும் பினாமிகளையும் ஒரே நாளில் அமுக்கிவிட்டது வருமானத்துறை. 190 இடங்களில் 2,000 அதிகாரிகளைக் கொண்டு சசிகலா குடும்பத்தினரை வளைத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது வருமான வரித்துறை.

  சென்னை தினகரன் வீட்டுக்கு காலையில் ஒரு வருமான வரித்துறை சென்றிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் மிகவும் பதற்றத்துடன் பேசினார் தினகரன்.

  சாணி, உரம் கிடைக்கும்

  சாணி, உரம் கிடைக்கும்

  அப்போது, என்னுடைய சென்னை வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை. ஆனால் புதுவையில் உள்ள பண்ணை வீட்டுக்கு போயுள்ளார்கள். 2 மாதத்துக்கு ஒருமுறைதான் அங்கே போவேன்.. அங்கே போனால் சாணி, உரம்தான் கிடைக்கும். எதுவும் இருக்காது. இருந்தாலும் எதையாவது வைத்துவிட்டு பழிபோடுவார்கள் என்பதற்காக கட்சியினர் மற்றும் வழக்கறிஞரை அங்கே போக சொல்லியிருக்கிறேன் என மீண்டும் மீண்டும் ரொம்ப பதற்றத்துடன் கூறினார் தினகரன்.

  அதிர்ச்சியில் ஐடி அதிகாரிகள்

  அதிர்ச்சியில் ஐடி அதிகாரிகள்

  புதுவை செய்தியாளர்களுக்கே இந்த ரெய்டின் மூலம் தினகரனின் ரகசிய பண்ணை வீடு இருக்கும் இடமே தெரியவந்தது. வெளியே பார்ப்பதற்கு பக்கா தோட்டம் போல இருக்கிறது. ஆனால் உள்ளே சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தியதில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  அறைக்கு சீல் வைப்பு

  அறைக்கு சீல் வைப்பு

  இந்த பாதாள அறைகளுக்கும் எலக்ட்ரானிக் பூட்டு போடப்பட்டிருக்கிறது. பெரும் போராட்டத்துக்கு பின்னரே இந்த எலக்ட்ரானிக் பூட்டு திறக்கப்பட்டதாம். அந்த அறையில் கிடைத்த ஆவணங்கள், பொருட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை மலைக்க வைத்துவிட்டதாம். இரவோடு இரவாக அந்த அறையை சீல் வைத்துவிட்டு கிளம்பினர் அதிகாரிகள்.

  உளறியது இதற்கு தானாம்..

  உளறியது இதற்கு தானாம்..

  பாதாள அறை இன்று மீண்டும் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ரகசிய பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறை இருப்பதால்தான் அவசரம் அவசரமாக செய்தியாளர்களை அழைத்து உரம், சாணி என தினகரன் உளறி கொட்டியது தற்போது அம்பலமாகியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Income Tax officials conducted a raid at Dinakaran's farm house at Auroville in Puducherry on Thursday. The officials were shocked over the underground secret rooms in the Dinakaran's Farm House.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற