ஜெ. சசிக்கு ரொக்கப் பணத்தை வைரங்களாக மாற்றும் ஐடியா கொடுத்த கர்நாடகா ஃமாபியா- பகீர் தகவல்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.சசியின் பல்லாயிரம் கோடி ரூபாய் வைரங்கள்..வீடியோ

  சென்னை: நாடு முழுவதும் சசிகலா குடும்பத்தினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்தும் சோதனையே பதுக்கி வைக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களைத்தேடித் தான் என கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் ரொக்கத்தை வைரங்களாக மாற்றும் யோசனையை கொடுத்ததே ஜெயில் மேட்டாக இருந்த கர்நாடகா ஃமாபியா கம் அரசியல்வாதிதானாம்.

  தேர்தல் செலவுகளுக்காக கப்பமாக கார்டனுக்கு வந்ததில் பெரும் பகுதி ரொக்கமாக சேமித்து வைக்கப்படுவது வழக்கம். இப்படி குவிக்கப்பட்ட பணம்தான் 2014 லோக்சபா தேர்தலுக்கு விநியோக்கப்பட்டு பெரும் வெற்றியும் பெற்றது.

  பெங்களூரு சிறையில்..

  பெங்களூரு சிறையில்..

  ஆனால் அடுத்த ஆண்டு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சிறைக்கு போக நேரிட்டது. சிறையில் இருந்த கர்நாடகா ஃமாபியா ஜெயலலிதாவையும் சசிகலாவையும் சந்தித்து பேசியிருக்கிறார். இவர் ஒருகாலத்தில் தாமரை அண்ட்கோவுக்கு ரொம்பவே நெருக்கமானவரும் கூட.

  வைரமாக்கும் ஆபரேஷன்

  வைரமாக்கும் ஆபரேஷன்

  இச்சந்திப்பின் போதுதான், ரொக்கமாக பதுக்குவதை விட்டுவிட்டு வைரங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். பதுக்குவதற்கும் கடத்துவதற்கும் எளிதாக இருக்கும் என ஐடியா கொடுத்திருக்கிறார். சிறைவாசத்துக்குப் பின்னர் வெளியே வந்த ஜெயலலிதா, சசிகலா வைரங்களாக மாற்றும் ஆபரேஷனை மும்முரமாக்கினார்கள்.

  சப் ஏஜெண்டுகள்

  சப் ஏஜெண்டுகள்

  சென்னை வைர நகைக் கடை உரிமையாளர் ஒருவர்தான் சர்வதேச அளவிலான தரகராம். அவர் மூலமாகவே பெருமளவு வைரமாக மாற்றப்பட்டிருக்கிறது. புதுவை, காரைக்கால் நகைக் கடை உரிமையாளர்கள் சப் ஏஜெண்டுகளாக இருந்திருக்கின்றனர்.

  ஒப்புதல் வாக்குமூலம்

  ஒப்புதல் வாக்குமூலம்

  இந்த சென்னை ஓனர்தான் அண்மையில் ஐடி அதிகாரிகளிடம் சிக்கியவர். அவர்தான் ஜெயலலிதா, சசிகலா விவகாரங்களை சிந்தாமல் சிதறாமல் ஐடி அதிகாரிகளிடம் ஒப்புவித்தவராம். அதனால்தான் வைரங்கள் கடத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் சசிகலா குடும்பத்தின் அத்தனை நெட்வொர்க்கையும் சைலண்ட் மோடுக்கு கொண்டு போய் ரெய்டு நடத்துகிறதாம் ஐடி.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  According to the sources, Income Tax Department officals are targetting to find out the Jayalalithaa's Diamonds from Sasikala family.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற