தினகரனின் ரகசிய புதுவை பண்ணை வீட்டு பாதாள அறையில் பல நூறு கோடி ரூபாய் ஜெ. வைரங்கள் பதுக்கல்?

தினகரனின் புதுவை ரகசிய பண்ணை வீட்டு பாதாள அறையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஜெயலலிதாவின் வைரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறைகள்....சாணி, உரம் இருந்ததா?- வீடியோ

    சென்னை: தினகரனின் புதுவை ரகசிய பண்ணை வீடு மிகப் பெரும் மர்ம தேசமாகி உள்ளது. இந்த பண்ணை வீட்டு பாதாள அறையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் சுற்றி வளைத்தது வருமான வரித்துறை. நாடு முழுவதும் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையை தொடங்கினர்.

    இன்று 2-வது நாளாக 150 இடங்களில் சோதனை தொடருகிறது. இந்த சோதனைகளில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது தினகரனின் புதுவை ரகசிய பண்ணை வீடுதான்.

    சாணி, உரம் என உளறல்

    சாணி, உரம் என உளறல்

    இது தொடர்பாக தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பதறிப் போய்தான் பேட்டியளித்தார். இந்த பண்ணை வீட்டி உரமும் சாணியும்தான் இருக்கும்; எதையாவது வைத்துவிட்டு பழிபோடுவார்களோ என்றெல்லாம் உதறலோடு பேசினார் தினகரன்.

    எலக்ட்ரானிக் சாவி

    எலக்ட்ரானிக் சாவி

    ஆனால் இந்த பண்ணை வீட்டில் ரகசிய பாதாள அறை இருப்பதும் இந்த அறைக்கு எலக்ட்ரானிக் சாவி இருப்பதும் தெரியவந்தது. பாஸ்வேர்டு இல்லாமல் திறக்க முடியாத இந்த அறையைத்தான் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர்.

    ஜெ. வின் வைரங்கள்?

    ஜெ. வின் வைரங்கள்?

    இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதாவது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஒருகட்டத்துக்கு மேல் சொத்துகளை வாங்கிக் குவிப்பதை கைவிட்டு விட்டு இருப்பவற்றையெல்லாம் வைரங்களாக மாற்றி பதுக்கத் தொடங்கினராம்.

    பல நூறு கோடி ரூபாய் வைரங்கள்

    பல நூறு கோடி ரூபாய் வைரங்கள்

    அப்படி ரூ22,000 கோடி அளவுக்கு வைரங்களாக மாற்றப்பட்டு ஆங்காங்கே பதுக்கப்பட்டிருக்கின்றவாம். இதில் ஒரு பகுதிதான் தினகரனின் புதுவை ரகசிய பண்ணை வீட்டு பாதாள அறையிலும் இருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அப்படியே வைரநகைகளை மீட்டாலும் இதை வருமான வரித்துறையினர் வெளியே சொல்வார்களா? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+