வாணி ராணி சீரியல் போலவே ராதிகா வீட்டில் ஐடி ரெய்டு நடக்குதேப்பா!
ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ராதிகாவின் கணவரை கைது செய்வார்கள் அதே போல நிஜத்திலும் ரெய்டு நடக்கிறது.
சென்னை : ராதிகாவின் வாணி ராணி சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கறுப்பு பணத்தை காரில் வைத்து கடத்தியதாக வாணியின் கணவரை கைது செய்வார்கள். கதைப்படி வாணி ராதிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள். அதே போல இப்போது நிஜமாகவே சரத்குமார் வீட்டிலும், ராதிகாவின் ராடான் மீடியா அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ராதிகாவின் கணவர் சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு கொடுத்தார். அவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் காரில் வந்துதான் ஆதரவு கொடுத்தார். இதில்தான் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது.
பாஜக ஆதரவு நிலையில் இருந்து அதிமுகவிற்கு தாவி, ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஓபிஎஸ்க்கு ஆதரவு கொடுத்தார். ஆர்.கே. நகரில் தனித்துப் போட்டி என்று கூறிய அவர், தனது கட்சி வேட்பாளரின் வேட்புமனுவை செல்லாமல் செய்தார். திடீரென்று டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுத்தார். இதனையடுத்தே சரத்குமார் வீட்டிலும், ராதிகாவின் ராடான் மீடியா நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

வாணி ராணி
ராதிகா இருவேடத்தில் நடித்துள்ள வாணி ராணி சீரியல் சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் கடந்த வாரமே ரெய்டு காட்சிகள்தான் ஒளிபரப்பானது. வாணியின் கணவர் பூமிநாதன், வில்லனின் மிரட்டலுக்கு பயந்து கறுப்பு பணத்தை கடத்துகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கி கைதாகிறார்.

ஐடி ரெய்டு
வாணி பூமிநாதனின் பூமி கிரானைட்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். பெற்ற மகனே தந்தையை கைது செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

ராதிகா தீர்க்கதரிசியா?
தன்னுடைய வீட்டில் இதே போல ஒரு ரெய்டு சம்பவம் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்துதான் இதே போல தனது சீரியலில் காட்சியமைத்தாரோ வாணி ராணி சீரியல் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடரும் குடைச்சல்
ராதிகா சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனையும், விசாரணையும் இன்னமும் முடியவில்லை என்றே தெரிகிறது. சீரியல் டிஆர்பிக்காக வைத்த காட்சிகள் எல்லாம் நிஜத்தில் நடப்பதால் பிரசர் எகிறிப் போய் உள்ளார் ராதிகா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications