போயஸ் கார்டன், கோடநாடு எஸ்டேட், விவேக் வீட்டில் இன்று 4வது நாளாக ஐடி ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவி சிஇஓ விவேக்கின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் இன்று 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவின் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள், ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட் என மொத்தம் 186 இடங்களில் கடந்த வியாழக்கிழமை காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

IT raid continues for fourth day in Kodanad estate, Poes Garden

இதில் போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டிவி அலுவலகம், ஜெயா டிவி சிஇஓ விவேக்கின் வீடு, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூரில் உள்ள கே.எல்.பி. கட்டுமான நிறுவனத்திலும் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். போலி நிறுவனங்களுக்கான ஆவணங்கள் விவேக் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டிடிவி தினகரனின் வீட்டில் சோதனை முடிந்துவிட்டது.

தினகரனின் பண்ணை வீட்டில் இருந்து ஏராளமான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT raid is going on for the fourth day in Kodanad estate, Jaya TV office, Jaya TV CEO Vivek's residence and many other places in Tamil Nadu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற