நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன், டாக்டர் சேதுராமன் வீடு, நிறுவனங்களில் ஐடி அதிரடி ரெய்டு
சென்னை: முன்னாள் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் துரைசாமியின் மகன் வெற்றிவேல், வீடு, பிரபல வைரவியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் சேதுராமன் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வைரவியாபாரி கீர்த்திலால் வீடு, நகைக் கடைக்கு சொந்தமான இடங்களும் சோதனையில் சிக்கியிருக்கிறது.

தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு நத்தம் விஸ்வநாதனின் பினாமியாக கருதப்படும் அவரது நண்பர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றிவேல் வீடு, டாக்டர் சேதுராமனின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications