அமைச்சர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் ஐடி ரெய்டு.. ரூ.89 கோடி நகை, சொத்து ஆவணம் பறிமுதல்!
வருமான வரித்துறை சோதனையில் சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இதுவரையில் ரூ. 4.5 கோடி பணம், நகை, ரூ.89 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீடு, அலுவலகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட 35 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காலையில் இருந்து பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தச் சோதனையின் போது பல்வேறு ரகசிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகாரி விளக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் காலை 6 மணியில் இருந்து சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் விஜயபாஸ்கர் காலை 4 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். இதனை வருமானத் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

துன்புறுத்தல் அல்ல
யாரையும் நாங்கள் துன்புறுத்தவில்லை என்று வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப கூறினோம் என்றும், புத்தக பையை சோதனையிட்ட பின் செல்ல அனுமதி அளித்தோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

ஆதாரங்கள் சிக்கின
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் சிக்கின. அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

எம்எல்ஏ விடுதி
சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அறையில் வாக்காளர் பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.89 கோடி ஆவணம் பறிமுதல்
இன்று நடத்திய வருமானவரித் துறை சோதனையில் மொத்தமாக 4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நகை மற்றும் ரூ. 89 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications