ரூபாய் நோட்டை மாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.. சென்னை கல்லூரியில் ரூ8 கோடி அதிரடி பறிமுதல்!
சென்னையில் நூதன முறையில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சித்த கல்லூரியில் இருந்து ரூ8 கோடி சிக்கியது.
சென்னை: செல்லாத நோட்டுகளை நூதன முறையில் மாற்ற முயற்சித்த கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து ரூ8 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை ஜெயின் ஜோசப் பொறியியல் கல்லூரியில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது ரொக்கமாக ரூ8 கோடி பணம் கல்லூரியில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கல்லூரி நிர்வாகம் தம்மிடம் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளாக இருந்த ரூ8 கோடியை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்தது.
ஆனால் நேரடியாக இது சாத்தியம் இல்லை என்பதால் கல்லூரி ஊழியர்களின் வங்கிக் கணக்குகள் மூலமாக பதுக்கிய பணத்தை வெள்ளையாக்க திட்டமிட்டுதான் பணம் கொண்டுவரப்பட்டதாம். இத்தகவல் வருமான வரித்துறைக்கு செல்ல ஒட்டுமொத்தமாக ரூ8 கோடி ரொக்கமும் இப்போது பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.
நாடு முழுவதும் இப்படி கருப்பை வெள்ளையாக்கும் யுத்திகள் நாள்தோறும் அம்பலமாகி வருகின்றன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications