அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்ககேடானது - ஜிகே.வாசன் 'பொளேர்'
தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்: தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை வெட்ககேடானது என ஜிகே.வாசன் சாடினார். மேலும் தற்போது பதவியில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும் ஜிகே.வாசன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை சுட்டிக்காட்டிய அவர், அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பது வெட்கக்கேடானது என்றார்.

தற்போது பதவியில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும் ஜிகே.வாசன் தெரிவித்தார். மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளை பிரதமர் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறிய அவர், விவசாயிகள் தங்களுடைய உடல் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறக்க முயற்சித்தால், பொதுமக்களுடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்றும் ஜிகே.வாசன் தெரிவித்தார். மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் கேட்ட இடங்களை அதிமுக கொடுக்காததால் மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டதாக கூறிய ஜிகே.வாசன், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாக கூறினார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications