அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ சூளுரைப்போம்: முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பக்ரீத் வாழ்த்து
சென்னை: பக்ரீத் பண்டிகையான இந்த தியாகத் திருநாளில் அனைவரும் நலமுடனும், வளமுடனும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ்வதற்கு பாடுபட சூளுரைப்போம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
பக்ரீத் பண்டிகை, ஹஜ் பெருநாள், ஈதுல் அள்ஹா என்றெல்லாம் அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலக முஸ்லீம்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். உருவமற்ற ஒரே இறைவனை வணங்குவதற்கென்று உருவாக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசலான கஃபாவை வலம் வருவதிலும், அரஃபா பெருவெளியில் லட்சோப லட்சம் ஹாஜிகள் இறை தியானத்தில் ஈடுபடுவதும் புனித ஹஜ் கடமையின் அங்கங்களாகும்.

இந்நாளில் உயிரோட்டமாக உள்ள அம்சம் தியாகம் ஆகும். இறைவனை நம்புவதும் - அவனை வணங்குவதும் - அவனுக்காக எந்த தியாகத்தையும் செய்வதும் முழுமை அடைந்திருக்கும் இறை நம்பிக்கையின் அடையாளமாகும். மனிதனை கெடுக்கும் பேராசை, பொறாமை, அகங்காரம், ஆணவம், பகைமை போன்ற பாவக் கறைகளை விட்டு மனித இதயத்தை பரிசுத்தப்படுத்துவதற்கு பெயர் தான் குர்பானீ.
வன்முறை பெருகி, வரம்புகளற்ற வாழ்க்கையால் விளையும் சமூக கேடுகளை புறந்தள்ளி, மானிடநேய மாண்புக்குரிய மரபுகளையும், நல்லிணக்க கடமைகளையும் நிலை நிறுத்துவதற்கு தியாகம் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
இந்த தியாகத் திருநாளில் அனைவரும் நலமுடனும், வளமுடனும், ஒற்றுமை உணர்வுடனும் வாழ்வதற்கு பாடுபட சூளுரைப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications