For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பால் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

தஞ்சை: பால் விலை உயர்வை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கும்பகோணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பால் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் பஷீர் அஹமது தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் உமர் ஜகாங்கீர் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில கல்விப்பணி செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் பால் விலையை திரும்ப பெறக் கோரியும், மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், மகாமகம் விழாவை முன்னிட்டு கும்பகோணத்தை நோக்கி வரும் அணைத்து சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

IUML protests in Kumbakonam condemning milk price rise

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர்கள் திருமங்கலக்குடி முஹம்மது சுல்தான், ஜமால் முஹம்மது இபுராஹிம், முஹம்மது ஹுசைன், ஆடுதுறை ஹாஜி முஹம்மது, திருப்பானந்தாள் சர்புதீன், பண்டாரவாடை தாவூது பாட்சா, ராஜா முஹம்மது, வழுத்தூர் கமாலுதீன் பைஜி, முஹம்மது ஷரிப், மில்லத் நகர் ரியாசுதீன், முஹம்மது இஸ்மாயில், வடக்கு மாங்குடி முஹம்மது இப்ராஹிம், பசுபதி கோவில் முத்தலீப், ரூஹுல் ஹக், திருமங்கலக்குடி இமாம் ஷாகுல் ஹமீது ரஷாதி, ஆடுதுறை இமாம் ஷாகுல் ஹமீது தாவூதி, இமாம் சையது அஹமது, அய்யம்பேட்டை ராஜாஜி, பொதக்குடி பைசல், ஆளிமான் ஜியாவுதீன், கடையநல்லூர் ஹபீபுல்லாஹ், முஹம்மது பந்தர் அப்துல் ரஹீம், தவக்கல் பாட்சா, சம்சுல் ஹுதா, ராஜகிரி ஹபீப் முஹமது முபாரக் அலி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்ட முடிவில் சிம்லா நஜீப் நன்றியுரை கூறினார். பிறகு முக்கிய நிர்வாகிகள் சப் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

English summary
Indian Union Muslim League protested in Kumbakonam condemning the milk price rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X