கேரளா எல்லைச் சோதனைச் சாவடியில் ஊழியர் பற்றாக்குறை: விடிய விடிய ஐயப்ப பக்தர்கள் காத்திருப்பு
செங்கோட்டை: தென்காசி அருகே புளியறை சோதனை சாவடியில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். போதிய ஊழியர்கள் இல்லாததால் சோதனைச் சாவடியில் இரவு முதல் வாகனங்கள் தேக்கமடைந்துள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக கேரளா எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக 24மணி நேரமும் கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து இருமடங்கு அதிகரித்துள்ளது.இதன் காரணமாக இந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் வாகனங்கள் புளியரையில் உள்ள தமிழக போக்குவரத்து துறை (மோட்டார் வாகன)சோதனை சாவடியில் இரவு12மணிமுதல் பெர்மிட் போடுவதற்காக வாகனங்களை வரிசையில் நிறுத்தியுள்ளனர். அங்கு கணிணி இயக்க அனுபவம் வாய்ந்த பணியாளர் இல்லாததினாலும்,ஆன்லைன் பணியை சீராக செய்ய முடியாததினாலும் நள்ளிரவு முதல் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சாலையில் அணிவகுக்கத் தொடங்கியதால் போக்குவரத்து நெருக்கடி உருவானது.
இந்த நிலை காலை 7மணிவரை சீராகததால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெரியவர்கள், பெண்கள், முதியவர்கள்,குழந்தைகள் என அனைவரும் பெரிதும் அவதிப்பட்டனர். விடிய விடிய சாப்பாடு, குடிநீர் என எந்த வசதியும் இல்லாமல் தவித்த ஐயப்ப பக்தர்கள் மோட்டார் வாகன சோதனை சாவடியை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

காலையில் விடிந்ததும் ஆங்கங்கே சாலையில் சமையல் செய்து பசியை போக்கினர் .ஆன்லைன் மூலம் ஐயப்பன் தரிசனத்திற்கு முன் பதிவு செய்த பக்தர்கள் பெரிதும் தவியாய் தவித்தனர். ஞாயிறன்று மண்டலபூஜை தொடங்க உள்ள நிலையில் அதிகரித்து வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தால் இன்னும் வாகன நெரிசல் ஏற்படும் நிலை உருவாகும்,என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் கணிணி பணியாளர்களை நியமித்து வாகன நெரிசலை குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications