நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம்... பேரவையினருக்கு ஜெ. தீபா வேண்டுகோள்!
ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும் என்று பேரவையினரை ஜெ. தீபா கேட்டுக் கொண்டுள்ளார் .
சென்னை : நீட் தேர்விற்கு எதிராக பேரவையின் மாணவர் மற்றும் இளைஞர்க அமைப்பினர் போராட வேண்டும் என்று ஜெ. தீபா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : எனது அன்பான பேரவை உறுப்பினர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் உங்கள் அன்புச்சகோதரியின் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நடைபெறும் அதிகாரப்பசிமிக்க அரசாங்கத்தால் நமது மாநில நலன்கள் பலி கொடுக்கப்பட்டு நீதி நிலைநாட்ட படாமல் சுயாட்சி உரிமையை இழக்க தொடங்கியதின் வெளிப்பாடே இன்றைய மாணவி அனிதாவின் தற்கொலை சம்பவம்.

டெல்லி ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் தலையாட்டி பொம்மை அரசாக மாறியதின் விளைவே அனிதா என்ற கிராமப்புற ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்துபோனதற்கு காரணம். அதனாலேயே அந்த மாணவி அத்தகைய துயர முடிவைத்தழுவினாள்.
இந்த துயர மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே முழுப்பொறுப்பு. நான் நமது பேரவையின் தொண்டர்களை கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால் இந்த சம்பவத்தை அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக்குரல் எழுப்புவதோடு மட்டுமல்லாமல் ஏழை கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு நீட் தேர்வை ரத்துசெய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.
அது மட்டுமே மாணவி அனிதாவின் துயரமான முடிவிற்கு நீதி கிடைத்திட ஒரு வாய்ப்பாக அமையும் குறிப்பாக நமது பேரவையின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர்கள் மாணவி அனிதாவின் துயர மரணத்திற்கு நீதிகேட்டு போராட முன்வர வேண்டுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications