நாலந்தரமாக தொடர்ந்து பேச்சு...எதிர்கால அரசியலுக்கு வந்த பேராபத்தாக புறம்போக்கு புகழ் தீபா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அரசியலுக்கு வந்துள்ள ஜெ.தீபா தொடர்ந்து அரசியல் மேடையில் நாகரீகமற்ற முறையில் பேசி வருவதை அனைவரும் பேராபத்தாகவே கருதுகின்றனர்.

ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தை தொடர்வதற்காகவும், தொடர்ந்து மக்கள் பணியாற்றவும் அரசியல் பிரவேசம் எடுப்பதாக அவரின் அண்ணன் மகள் தீபா பிப்ரவரி 24ம் தேதி அறிவித்தார். இதனையடுத்து தனது பேரவைக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்று பெயரிட்டு அறிவித்தார். தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் அதிமுக ஜெ.தீபா அணி எம்ஜிஅர் அம்மா தீபா பேரவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வழியில் அரசியல் நடத்த வந்த தீபா தொடர்ந்து நாகரீகமற்ற வார்த்தைகளைப் பேசி அரசியல் மேடையை நாறடித்து வருகிறார். கடந்த வாரம் போயஸ் கார்டனுக்கு சென்ற போது தனது சகோதரனால் விரட்டியடிக்கப்பட்டார் தீபா. அப்போது தீபக்கை தீபா பொதுஇடத்தில் வைத்தே எச்சக்கல, நல்லா இருக்க மாட்ட, பொய் சொல்லாதே, என் முகத்தலயே முழிக்காத என்றெல்லாம் வசைபாடினார். இதே போன்று சசிகாலவை புறம்போக்கு என்று மீடியாக்கள் மத்தியில் திட்டினார்.

 முகம் சுளிக்கும் பேச்சுகள்

முகம் சுளிக்கும் பேச்சுகள்

அந்தப் பேட்டியைக் கண்டவுடனேயே ஜெ.தீபாவின் அரசியல் பேச்சுகள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. எதிர் அணி அரசியல், கடுமையான விமர்சனங்கள் இருந்த போதும் தமிழக அரசியலில் இதுவரை நாகரீகமற்ற அணுகுமுறை என்பது இல்லாமல் இருந்தது.

 வம்புக்கு இழுத்த சம்பத்

வம்புக்கு இழுத்த சம்பத்

இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள்ளாகவே ஜெ.தீபா தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது குறித்து அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கிண்டல் செய்திருந்தார். யாரிடம் கையெழுத்து வாங்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார் என்று தீபாவை வம்புக்கு இழுத்தார்.

 விளக்கமாருக்கு பட்டுக்குஞ்சமா?

விளக்கமாருக்கு பட்டுக்குஞ்சமா?

நாஞ்சில் சம்பத்தின் கருத்துக்கு அதிமுக ஜெ.தீபா அணி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செய்தித் தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சிவப்பு விளக்கு சிங்காரியாக வலம் வரும் ஆண் விலைமகன், விளக்கமாருக்கு பட்டுக்குஞ்சம் ஒரு கேடா? நாலாம்தர நரகல் பேச்சாளருக்கு நாஞ்சில் பட்டம் ஒரு கேடா என ஏக வசன நெடிக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது அறிக்கை.

 'புறம்போக்கு' சம்பத்தே என கண்டனம்

'புறம்போக்கு' சம்பத்தே என கண்டனம்

இளையபுரட்சித் தலைவி வாடாமல்லி தீபாவை சசிகலா,தினகரனிடம் வாங்கிய காசுக்காக விமர்சித்தது மக்கள் மத்தியல் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. புத்தொளி சம்பத்தாய் கிளம்பி புறம்போக்கே நாஞ்சில் சம்பத்தாய் பச்சோந்தியாய் மாறிய அபல அனாதையே அடங்கிக்கொள் இல்லையேல் தமிழகத்தில் நீ எங்குமே மேடையேற முடியாது என்று நாஞ்சில் சம்பத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேராபத்து

பேராபத்து

தீபா கோஷ்டியின் இந்த நரகல் ஏக வசனங்கள் தமிழக அரசியலின் நாகரீக அணுகுமுறைகளை குழிதோண்டி புதைத்து வருகிறது. இதுபோன்ற கும்பல் அரசியலில் நீடிப்பது தமிழக அரசியலுக்கே பேராபத்து என்பதுதான் நிதர்சனம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Hatred speech of J.Deepa and their party spokesperson signs the threat of foture politics
Please Wait while comments are loading...