ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது!
சென்னை: வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது நடிகர் ஜாக்கி சானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்கி சான் என்றாலே உலக அளவில் சண்டைப் பட பிரியர்களுக்கு உற்சாகம்தான். ஹாங்காங்கில் பிறந்த 62 வயதாகும் ஜாக்கிச் சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
ஹாலிவுட் திரையுலகில் பொன்விழா காணும் ஜாக்கி சான், நடிகர், தற்காப்புக் கலை நிபுணராக மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என்றும் முத்திரை பதித்தவர்.

ஜாக்கி சான் ரசிகர்கள்
தற்காப்பு கலையை சினிமாவில் பயன்படுத்தி அதன் மூலம் மக்களை கவர்ந்த ஜாக்கிசான் தனது 8 வயது முதல் நடிக்கத்தொடங்கியவர். எழுத்தாளராகவும், இயக்குநராகவும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஹாங்காங்கில் எடுத்துள்ளார். இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆஸ்கர் விருது
உலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் இரண்டாவது நடிகர் என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவரை பட்டியலிட்டிருந்தது. இதுவரை ஆஸ்கர் விருது பெறாத ஜாக்கி சானுக்கு முதல் முறையாக கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை "THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE" அமைப்பு அறிவித்துள்ளது.

நவம்பர் 12ல் விருது
ஜாக்கிசானின் சினிமா பயணத்தை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்கி சான் உடன் மேலும் மூவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ்ஏஞ்சல்ஸ்
எடிட்டர் அன்னி கோட்ஸ், காஸ்டிங் டைரக்டர் லின் ஸ்டால்மாஸ்டர் மற்றும் ஆவண திரைப்பட தயாரிப்பாளர் ரெட்ரிக் வைஸ்மேன் மூவரும் கவுரவ ஆஸ்கர் விருதை பெறுகின்றனர். இவர்களுக்கு நவம்பர் 12 தேதி நடக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications