டோணிக்கு எதிராக கோஹ்லி கொந்தளிக்க.. ஜடேஜா அன் கோவே காரணம்?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் தவறாமல் இந்திய அணியில் இடம் பெறுகிறார்கள் என்ற எரிச்சலில் விராத் கோஹ்லி உள்ளாராம். இதுவே அவர் டோணிக்கு எதிராக செயல்பட முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அணிக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளதாம்.
எதற்கெடுத்தாலும் முறுக்கிக் கொண்டு முண்டா தட்டும் கோஹ்லி தற்போது டோணியுடன் நேருக்கு நேர் மோதலில் குதித்துள்ளார். வங்கதேச தொடரில் இது பெரிதாக வெடித்துள்ளது. கோஹ்லி இரு போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. அவரது ஆதரவு வீரர்களம் கூட கிட்டத்தட்ட ஸ்டிரைக் செய்வது போல ஆடி வருகின்றனர்.

டோணி தரப்பு இந்த கும்பலின் அக்கப்போரால் கடும் டென்ஷனாகியுள்ளதாம். இந்த விரக்தியில்தான் பதவியிலிருந்து விலக நான் தயார் என்று கூறி நீண்ட பேட்டி அளித்துள்ளார் டோணி.
ப்பூ.. வென ஊதித் துப்பி விடக் கூடிய அளவிலான வங்கதேச அணியை வீழ்த்த முடியாமல் போனதற்கு கோஹ்லி தரப்பே காரணம் என்பது டோணி தரப்பின் வருத்தமாகும். இது தனக்குக் கெட்டப் பெயரைத் தரும் என்பதால்தான் கோஹ்லி தரப்பு வெற்றிக்காகப் பாடுபடாமல் வேண்டும் என்றே சொதப்பலாக ஆடியது என்றும் டோணி தரப்பு குமுறுகிறது.
எப்போதும் நிதானமாக இருக்கும் டோணி, முதல் போட்டியின்போது வங்கதேச பவுலரை இடித்துத் தள்ளி கோபாவேசம் காட்டியதும் கூட கோஹ்லி தரப்பு ஏற்படுத்தி வரும் டென்ஷன் காரணமாகவே என்றும் கூறுகிறார்கள்.
இந்திய அணியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே முக்கியக் கருவாக இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களான அஸ்வின், மோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு டோணி தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார். குறிப்பாக சரியாக ஆடாவிட்டாலும் கூட ஜடேஜா கண்டிப்பாக அணியில் இடம் பெற்று விடுகிறார் என்பது கோஹ்லி தரப்பின் புலம்பலாம்.
ஆனால் எந்த வீரருக்கு வாய்ப்பு தருவது, யாரை விளையாட வைப்பது என்பது கேப்டனின் உரி்மை, அதில் யாரும் தலையிட முடியாது என்பது டோணி தரப்பு பதிலடியாக உள்ளது.
டோணியிடம் தற்போது ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 கேப்டன் பதவி மட்டுமே உள்ளது. அதிலிருந்தும் அவரைக் காலி செய்வது என்று கோஹ்லி தரப்பு கோபாவேசமாக செயல்பட்டு வருகிறதாம். அதன் ஒரு பகுதிதான் வங்கதேச டூரில் அவர்கள் சொதப்பலாக ஆடியது என்கிறார்கள்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications