சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதியை சந்தித்தார் ஜெகன் மோகன் ரெட்டி
சென்னை:ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு தரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சென்னையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இன்று சந்தித்துப் பேசினார்.
ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது, ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும், இதுதொடர்பாக அரசியல் சட்டத்தின் 3வது பிரிவை துஷ்பிரயோகம் செய்ய மத்திய அரசு முயலக் கூடாது என்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிலைப்பாடு

இந்தக் கோரிக்கை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் பாஜக மற்றும் இடதுசாரி தலைவர்களையும் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துள்ளார்.
இதேபோல் தெலுங்கானா தனி மாநில மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமும் ஜெகன் மோகனும் அவரது கட்சியினரும் நேரில் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும் அவரது கட்சி குழுவினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தெலுங்கானா தனி மாநில மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க வேண்டாம் என்றும் ஜெகன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

கருணாநிதியுடன் சந்திப்பு
இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். அப்போது ஒருங்கிணைந்த ஆந்திரா கோரிக்கையை திமுக ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
500 பேனர்கள் அகற்றம்
முன்னதாக இன்று காலை ஜெகன் மோகன் வருகையையொட்டி சென்னை விமானம் நிலையம் முதல் ஜெகனின் சகோதர்ர் வீடு இருக்கும் போய்ஸ் தோட்டம் வரைக்கும் நகரம் முழுவதும் 500க்கும் அதிகமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் 2 பேனர்கள் மாணவர்கள் மீது விழுந்து காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஜெகன் மோகன் ரெட்டிக்காக வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றும் பணியில் சென்னை போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications