வாயில் எச்சில் ஊற வைக்கும் குண்டு வெல்லம்.. பொங்கலுக்காக தயாராகிறது.. நாமக்கல்லில்!
கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி நாமக்கல் அருகே வெல்ல ஆலையில் குண்டுவெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமடைந்துள்ளது.
ஆனால் வெல்லத்திற்கு உரிய விலை கிடைக்காததால் அவர்கள் கவலையிலும் தோய்ந்துள்ளனர்.
இந்தக் கவலைக்கு மத்தியிலும் குண்டு வெல்லத் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு...
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா வாங்கல். சோழசிராமணி, தோட்டக்குறிச்சி, தளவபாளையம், புகழுர், வேலாயும்பாளையம், திருக்காடுதுறை, நடையனூர், முத்தனூர், சேமங்கி, மறவபாளையம், நெய்யல், குறுக்குசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்படுகிறது.
நாமக்கல்லுக்கு ஏற்றுமதி...
இந்த பகுதிகளில் விளையும் கரும்புகள் அனைத்தும் நாமக்கல் மாவட்டம் சேர்ந்த வெல்லஆலை உரிமையாளர்கள் வாங்கி செல்லுகின்றனர். அதிக வெல்ல ஆலைகள் உள்ள நாமக்கல் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி, ஜேடர்பாளையம், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயார் செய்யப்படும் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கட்டிக் கரும்பை சாறு பிழிந்து...
இவ்வாறு ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும் கரும்புகள் சாறு பிழியப்பட்டு, கொப்பரைகளில் ஊற்றப்பட்டு பின்னர் கரும்பு பால் காய்ச்சப்படுகிறது. காய்ச்சப் பட்ட கரும்பு பால் பதமாக வந்த பின்னர் அச்சு வெல்லங்கள் தயார் செய்ய அச்சுகளில் ஊற்றப்படுகிறது. சிறிதுநேரம் கழித்து அச்சுகளில் ஊற்றப்பட்ட அச்சினை தலைகீழாக கவிழ்த்ததும் அச்சு வெல்லங்கள் கீழே விழுகிறது.
ஈரத் துணியால் உருண்டை பிடித்து...
இதேபோல் உருண்டை வெல்லம் தயாரிக்க காய்ச்சப்பட்ட கரும்பு பாலை ஒரு மரப்பலகையில் கவிழ்ந்து சிறிதுநேரத்தில் ஈரத்துணியால் உருண்டை பிடித்து அடுக்கி வைக்கின்றனர். இந்த நிலையில் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆலைகளில் அச்சு வெல்லம் மற்றும் குண்டு வெல்லம் தயார் செய்யும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
அச்சு வெல்லம் - குண்டு வெல்லம்...
இவ்வாறு தயாரான அச்சுவெல்லம் மற்றும் குண்டு வெல்லங்களை 30 கிலோ கொண்ட தனித்தனி மூட்டைகளாக (சிப்பம்) கட்டப்பட்டு பிலிக்கல்பாளையத்தில் ஏலச்சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இங்கு ஏலம் எடுத்த வெல்லங்களை தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்கின்றனர்.
முக்கியப் பங்கு வகிக்கும் வெல்லம்...
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையில் சர்க்கரை பொங்கல் வைப்பதற்கு வெல்லம் முக்கிய பங்கு வகிப்பதாலும், இந்த ஆண்டு அதிகளவில் முன்பதிவு வந்து உள்ளதாலும் வெல்லத்திற்க்கான விலையில்லை என உற்பத்தியாளர்கள் கவலையில்உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் 40 ஆண்டுகாலமாக வெல்லம் தயாரித்து வருகிறேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு வெல்லம் நல்ல விலையிருந்தது. இப்போது வெளிமாநிலங்களில் வெல்லம் உற்பத்தி நடைபெறுவதால் விலையும் குறைவாக இருக்கிறது.
வெளிமாநிலங்களுக்குப் போவதில்லை...
தமிழகத்தில் இருந்து வெல்லம் வெளிமாநிலங்களுக்கு செல்வதில்லை. எனவே தமிழக அரசு பொங்கலுக்கு பொதுமக்களுக்கு போனசாக வெல்லத்தை வழங்கவேண்டும் என தெரிவித்த அவர்கள் மின்கட்டணம் உயர்வை திரும்பபெறவேண்டும் என தெரிவித்தனர்.
விலை உயரும்...
இந்த பகுதியில் வழக்கத்தை விட கூடுதலாக வெல்லம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஆலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இதேபோல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்த பகுதியில் வெல்லத்தின் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications