'டேமேஜான' பெயரை "டால்மியா சிமென்ட்" போட்டு அடைக்க சீனிவாசன் முடிவு?
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் தனது ஆதரவாளரான ஜக்மோகன் டால்மியாவை போட்டியில் இறக்கி அவரைத் தலைவராக்க சீனிவாசன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது சிருங்கேரி சங்கராச்சாரியாரைப் பார்க்க சீனிவாசன் சிருங்கேரி போயுள்ளார். அங்கு போய் விட்டுத் திரும்பி வந்ததும் தனது முடிவை அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது.

சீனி கூடாது!
ஐபிஎல் மேட்ச்பிக்ஸிங் வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட் அளித்த அதிரடியான தீர்ப்பைத் தொடர்ந்து சீனிவாசனால் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடியாது. காரணம், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் இருப்பதால்.

டால்மியாவை இறக்கு
எனவே தனக்குச் சாதகமான ஜக்மோகன் டால்மியாவை தலைவராக்க சீனிவாசன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முதல்ல சிருங்கேரி
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து சிருங்கேரி மடத்திற்குப் புறப்பட்டுப் போய் விட்டார் சீனிவாசன். 2 நாட்கள் கழித்துத்தான் அவர் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
தீர்ப்பால் அவர் நிலைகுலைந்து போகவில்லை என்று அவரது தரப்பு கூறுகிறது. சுப்ரீம் கோர்ட் தன்னை குற்றமற்றவன் என்று சொல்லி விட்டதை அவர் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளாராம். இப்போது தேர்தலில் மட்டுமே போட்டியிட தனக்கு தடை உள்ளதாக கருதும் சீனிவாசன், அது தனக்கு அவமானமானதாக இருக்காது என்றும் கருதுகிறாராம்.

வந்ததும் முடிவு
எனவே தலைவர் பதவிக்கு அவர் தனது ஆதரவாளரான டால்மியாவை நிறுத்தி வெற்றி பெற வைக்க தீர்மானித்துள்ளாராம். சிருங்கேரியிலிருந்து வந்ததும் இதுதொடர்பாக அவர் முடிவெடுப்பார் என்கிறார்கள். சென்னை திரும்பியதும் அவர் கிரிக்கெட் வாரியக் கூட்டத்தையும் கூட்டவுள்ளார்.

டால்மியாவுக்கும் ஓ.கேதான்
டால்மியாவிடம் இதுதொடர்பாக ஏற்கனவே சீனிவாசன் பேசி விட்டதாக தெரிகிறது. அவரும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.

ஜேட்லி என்ன சொல்வாரோ
சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த அருண் ஜேட்லி சீனிவாசனையும் சந்தித்துப் பேசி விட்டுச் சென்றுள்ளார். ஜெயலலிதாவைப் பார்த்துப் பேசிய பிறகு அவர் சீனிவாசனை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் அவர் டால்மியாவை ஆதரிப்பாரா என்பது தெரியவில்லை.

பேரை மாத்தியாச்சு
இதற்கிடையே, ஜனவரி 1ம் தேதி முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், இந்தியா சிமெண்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் இனிமேல் இந்தியா சிமெண்ட்ஸ்தான். இதை காரணம் காட்டி சீனிவாசனை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்குக் கொண்டு வர வாய்ப்புள்ளதா என்ற சட்ட ஆலோசனையும் ஒருபக்கம் முடுக்கி விடப்பட்டுள்ளதாம். இதுகுறித்து விரைவில் கோர்ட்டில் தெரிவிக்கவுள்ளார்களாம்.

ஆனால் கோர்ட் ஏத்துக்காதே
ஆனால் புதிய நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமே வைத்துள்ளதால், இதை சுப்ரீம் கோர்ட் ஏற்குமா என்பது தெரியவில்லை.

பாஸ் பதவியை விடுவதா.. நோ சான்ஸ்!
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்காக இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் பதவியை சீனிவாசன் கைவிடவும் வாய்ப்பில்லை. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கட்டுப்பாட்டு பங்குகளை அவர் யாருக்காவது விற்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் தலைவர் பதவி சாத்தியமாகும். ஆனால் அது கூட அவ்வளவு உதவியாக இருக்காது என்றே சொல்கிறார்கள்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications