அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு - விழா கமிட்டி அறிவிப்பு
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற போராடிய அனைவருக்கும் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மதுரை: வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் செல்லமாட்டோம் என்று கூறி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது.
மாணவர்களின் போராட்டம் புரட்சியாக மாறி வெடிக்கவே, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டசபையில் இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
எனினும் போராட்டக்குழுவினருடன் ஊர் பெரியவர்கள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் நிரந்தர சட்டம் கொண்டு வராவிட்டால் முதல்வர் பதவி விலகவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவில் முன்பு ஊர் கமிட்டி கூடியது. அப்போது அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் விழா கமிட்டி முடிவு செய்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் சுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெற கடந்த 8 நாட்களாக போராடிய மாணவர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 1ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேலரி அமைப்பது, டெபாசிட் செய்வது என அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு காண வரவேண்டும். மாணவர்களுக்கு தனி கேலரி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் தலைவர் சுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு எடுத்தாலும் அலங்காநல்லூரில் போராட்டம் நீடித்து வருகிறது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தாலும் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications