அலங்காநல்லூரைத் தொடர்ந்து பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு.. பிப். 2ம் தேதி!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அப்பகுதியின் ஊர் கமிட்டி தெரிவித்துள்ளது.
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் வரிசையாக 3 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 14ஆம்தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அதே போல 15ஆம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்காததால் தெய்வக்குத்தம் ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டுமானால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே பிரபலமான அலங்காநல்லூரில் கடந்த 16ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் தடை செய்யப்பட்டனர். இதனையடுத்து போராட்டம் நடைபெற்றது.
அவசர சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனவரி 22ஆம் தேதியன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அரசு அறிவித்தது. ஆனால் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. இதனையடுத்து மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறிவிட்டு சென்னை திரும்பினார்.
இதனிடையே அலங்காநல்லூரில் ஊர் கமிட்டி கூடி பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்தனர். இதே போல பாலமேட்டில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊர் கமிட்டி ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடக்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் ஊர் கமிட்டி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்களுக்கு நன்றி என்றும் ஊர் கமிட்டி சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பின்னர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்த பின்னர் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications