தடையை மீறி தேனி, மதுரையில் ஜல்லிக்கட்டு, கோவையில் ரேக்ளா ரேஸ்
கோவை: கோவையில் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடந்துள்ளது. மேலும் கூடலூர் மற்றும் பொதும்பு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டை போன்றே ரேக்ளா பந்தயத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரேக்ளா பந்தியத்தில் ஈடுபடுத்தப்படும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஈரோடு, கோவை மாவட்டங்களில் ரேக்ளா பந்தயம் மிகவும் பிரபலம். இந்நிலையில் கோவை மாவட்டம் எட்டிமலை பகுதியில் தடையை மீறி நேற்று ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த பந்தயத்தில் 50க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பந்தயம் நடத்தப்பட்டது. தடையை மீறி நடத்தப்பட்டாலும் பந்தயத்தை மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கூடலூரில் 10 காளைகளும், பொதும்பு கிராமத்தில் 15 காளைகளைக் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications