ஷாக் பிக்பாஸ்.. குட்டி டவுசர் நடிகையுடன் ஜூலியானா குத்தாட்டம்! நற்பெயரை கெடுக்காமல் வெளியேறுவாரா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு போராளி என்ற பட்டப்பெயருடன் அடியெடுத்து வைத்த ஜூலியானா போகும் பாதை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.
பிக்பாஸ் முதல் நாள் நிகழ்ச்சியில், நடிகர் ஸ்ரீயிடம் தனிமையில் அமர்ந்து ஜூலியானா பேசிக்கொண்டிருந்தார். அப்போது சக பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் செலப்ரட்டீஸ் என்பதால் ஒருவரை ஒருவர் அறிமுகம் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
அனைவரும் உள்ளே வரும்போது, கட்டிப்பிடித்துக்கொண்டதாகவும், தனக்கு யாருமே இல்லை என்றும், எனவே ஸ்ரீ வெளியே போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

சர்ச்சை பேச்சு
ஜூலியானாவின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த பேச்சுதான் உள்ளது. ஜல்லிக்கட்டு போராளி என்ற அடைமொழியோடு உள்ளே வந்தவர் ஜூலியானா. நர்ஸ் என்ற தொழிலை செய்யும் ஒருவர் என்ற வகையில் ஜூலியானா இந்த போட்டிக்கு வரவில்லை. போராளி என்ற போர்வையில் வந்தவர். எனவே அவரது செயல்பாடுகள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும், போராட்டக்காரர்களையும் பாதிக்கிறது.

உலகிற்கே எடுத்துக்காட்டு
ஜல்லிக்கட்டு போராட்டத்தை இழிவுபடுத்தி சில அரசியல் தலைவர்கள் கருத்து கூறியிருந்தனர். ஆனால் நாங்கள் அண்ணன், தங்கை போல பழகி உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்குவோம் என சூளுரைத்து செயலில் செய்து சாதித்தனர் இளைஞர்கள்.

ஜீரணிக்க முடியவில்லை
இப்படி சம கால வரலாற்றில் பெரும் புரட்சியாக பார்க்கப்படும் ஜல்லிக்கட்டு புரட்சியில் பங்கேற்று புகழ் பெற்ற ஜூலியானா, இவ்வாறு நடிகருடன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை போராட்ட களத்தில் இருந்தவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

வீடியோ
இந்த நிலையில், மேலும் ஒரு அட்டகாசமும் அரங்கேறியுள்ளது பிக்பாசில். 2வது நாளான இன்று காலை பிக்பாஸ் வீட்டுக்குள் என்ன நடந்தது என்பது குறித்த ஒரு சிறு புரமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில், சந்தோசமான துவக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரைகுறை ஆடைகள்
இந்த வீடியோ காட்சியில், பங்கேற்பாளர்கள் படுக்கையைவிட்டு எழும் காட்சிகள், பல்துலக்கும் காட்சிகள், மேக்கப் செய்யும் காட்சிகள் உள்ளன. நடிகைகள் குட்டி ஆடைகளை அணிந்தபடி உள்ளனர்.
இப்படி டிரஸ் போடுறாங்களே
நடிகைகள் குட்டி ஆடை அணிந்திருப்பது குறித்து, கஞ்சா கருப்பு மற்றும் வையாபுரி ஆகியோர் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் காட்சி அதில் உள்ளது. இப்படி டிரஸ் பண்ணிருக்காங்களே, டீசன்சி இல்லையா என கஞ்சா கருப்பு ஆதங்கப்படுகிறார். ஆண்கள் இருக்கிறோம் என்று கூட பார்க்காமல் இப்படி செய்கிறார்களே என்பது வையாபுரி ஆதங்கம்.

குத்தாட்டம்
கடைசி சில வினாடி காட்சிகள்தான் அடுத்த அதிர்ச்சி. குட்டி டிரவுசர் போட்ட நடிகையுடன் சேர்ந்து, ஜூலியானாவும் குத்தாட்டம் போடுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியானா எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அதில் ஆதங்கப்பட என்ன உள்ளது என்ற கேள்வி எழலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கையுள்ளது. அதுகுறித்து யாரும் கேள்வி கேட்க முடியாதுதான். ஆனால், ஜல்லிக்கட்டு களத்தில் கதாநாயகியாக தெரிந்த ஒருவர், தொடர்ச்சியாக, மோசமான வெளிச்சத்தில் காட்டப்பட்டு வருகிறார். இதன் பின்னணி என்ன? ஜல்லிக்கட்டு ஆர்வலர் என்ற பெயரை வைத்து பப்ளிசிட்டி தேடுவது சரியா? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications