கைதான இளைஞர்கள் விடுதலையாக மறுப்பு.. உள்ளிருப்பு போராட்டம் தீவிரம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் விடுதலையாக மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை: வாடிப்பட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலையாக மறுத்துள்ளனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே 21 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 48 பேர் முன்னதாக விடுவிக்கப்பட்டனர். பின்னர் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது 30 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு வழியில் போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 127 பேர் விடுதலையாக மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரும் வரை மண்டபத்திலிருந்து வெளியேறப் போவதில்லை என்று அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கைதானவர்கள் விடுதலையாக மறுப்பு தெரிவித்ததையடுத்து பிரச்சனை இடியாப்பச் சிக்கலாக மாறியது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசார் விழித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications