கைது செய்யப்பட்ட இளைஞர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்.. சீமான், அமீர் முயற்சிக்கு வெற்றி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: வாடிப்பட்டியில் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டவர் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே 21 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 48 பேர் முன்னதாக விடுவிக்கப்பட்டனர். பின்னர் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மீதமுள்ள 157 பேர் மண்டபத்திலிருந்து வெளியேற மறுத்து தொடர் உண்ணாவிரதம் மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் மிரட்டல்
இதனையடுத்து, அலங்காநல்லூரில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவர்கள் வழக்கு பதிவு செய்யப் போவதாக போலீசார் மிரட்டுவதாக கூறப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெற்றோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல்துறையினர் மிரட்டல் விடுத்தனர்.

மாணவர்கள் திட்டவட்டம்
வாடிப்பட்டி மற்றும் சோழவந்தானில் உள்ள மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும் வரை வெளியே செல்ல மாட்டோம் என்று திட்டவட்டமாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொடர் போராட்டம்
மேலும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அலங்காநல்லூர், பாலமேடு, கேட்டுகடை, தெத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீமான் பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய மாணர்கள் மற்றும் இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நீண்ட நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் இளைஞர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications