மழையால் விளைச்சல் குறைவு... விண்ணைத் தொட்டது மல்லிகை விலை!
நெல்லை: தொடர் மழை காரணமாக நெல்லையில் மல்லிகை பூ விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெண்கள் விரும்பி வாங்கி செல்லும் பூக்களில் ஒன்று மல்லிகை. இந்த பூ கடந்த சில தினங்களாக விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. நெல்லையில் கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ இன்று சந்தை தொடங்கியதும் அதிரடியாக ரூ.3 ஆயிரமாக உயர்ந்தது.
இதனால் மல்லிகை பூ வாங்க வந்த சிறு வியாபாரிகள அதிர்ச்சியில் உறைந்தனர். பலர் மல்லிகை வாங்குவதை தவிர்த்தனர்.

முகூர்த்த நாள்...
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘மழையால் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் இன்று மூகூர்த்த நாள் ஆகும். இதனால் விலையேற்றம் தவிர்க்க முடியாததாக உள்ளது.
வரத்துக் குறைவு...
அரும்பு கோட்டை பகுதியில் இருந்து மல்லிகை பூ வரத்து அதிகமாக இருந்தாலும் விலையும் அதிகமாக இருந்த போதிலும் சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டது.
விலை உயர்வு...
நெல்லையில் பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் கூட இந்த மல்லிகை பூவின் விலை உயர்ந்தது இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் ரக மல்லிகை...
இந்த நிலையில் இரண்டாம் ரக மல்லிகை பூக்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டதால் வியாபாரிகள் அதையே வாங்கி சென்றனர்.












Click it and Unblock the Notifications