ஜா கட்டர் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு வாடகை தெரியுமா?
தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் ஜா கட்டர் எந்திரம் மூலம் இடிக்கப்படுகிறது.
சென்னை: தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் ஜா கட்டர் எந்திரம் மூலம் இடிக்கப்படுகிறது. இந்த எந்திரத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.
அக்னி பிழம்பின் ஆக்ரோஷ பசிக்கு இரையானது 7 அடுக்கு மாடிகளை கொண்ட தி சென்னை சில்க்ஸ் கட்டடம். தி நகர் உஸ்மான் ரோட்டில் மேம்பாலத்துக்கு இணையாக கம்பீரமாக காட்சியளித்த தி சென்னை சில்க்ஸ் கட்டடம் 30 மணி நேரம் நீடித்த தீ விபத்தில் ஸ்திரத் தன்மையை இழந்து எலும்புக்கூடாய் போனது.
வெப்பத்தின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் போனதால் கட்டடத்தின் பல பகுதிகள் இடிந்து விழுந்தது. இதையடுத்து ஆபத்தான இந்தக் கட்டத்தை இடிக்க அரசு முடிவு செய்தது.

தொடங்கியது இடிக்கும் பணி
இதற்கான குழு அமைக்கப்பட்டு ஆய்வு மற்றும் ஆயத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நேற்று முதல் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

துளியும் பாதிக்கக்கூடாது
7 அடுக்குகளை கொண்ட இந்தக் கட்டடம் மேலிருந்து கீழாக இடிக்கப்படுகிறது. அருகில் உள்ள கட்டடங்களுக்கு துளியும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக கட்டடம் இடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

ஜா கட்டர் கருவி
இதற்கா ஜா கட்டர் எனும் அதி நிவீன ராட்சத கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்தக் காண்ட்ராக்ட்டை எடுத்துள்ளது.

ஒரு மணிநேரத்துக்கு ரூ.20,000
கட்டடத்தை இடிக்கும் இந்த ஜா கட்டர் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரண்டு ஜா கட்டர்கள் இடிப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.

ரூ.24 லட்சம்
இடிப்பு பணிகள் முடிய எப்படியும் 3 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக 60 மணி நேரம் என்றால் கூட 24 லட்சம் ரூபாய் செலவாகும்.

தீயை அணைக்க ஆன செலவு
தீயை அணைக்க ஆகும் செலவு சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் இருந்துதான் பெறப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதன்படி தீயை அணைப்பதற்கு ஆன செலவை தமிழக அரசு வசூல் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடிப்பு செலவு?
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தமிழக அரசு சார்பில் கட்டடம் இடிக்கப்படும் என்றார். அப்படியானால் ஜா கட்டருக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளுமா?
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications