தமுமுக, மமக தலைவராக மீண்டும் ஜவாஹிருல்லா, பொதுச்செயலராக ஹைதர் அலி தேர்வாகின்றனர்
சென்னை: த.மு.மு.க. மற்றும் ம.ம.க.வின் ஒருங்கிணைந்த செயற்குழு இன்றும், பொதுக்குழு நாளையும் சென்னையில் நடைபெறுகிறது. தலைவர், பொதுச்செயலாளர் , பொருளாளர் உள்ளிட்ட தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு பொதுக்குழுவின் அங்கீகாரம் பெறப்படவிருக்கிறது.
த.மு.மு.க., ம.ம.க. இரண்டுக்கும் தலைவராக மீண்டும் பேராசிரியர் ஜவாஹிருல்லா தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். த.மு.மு.க.வின் பொதுச்செயலாளராக ஹைதர் அலி தேர்வாகிறார்.

கடந்த 6 ஆண்டுகாலமாக எந்த பதவியுமில்லாமல் மூத்த தலைவர் என்ற அந்தஸ்த்தில் மட்டுமே இருந்த ஹைதர், இந்த முறை தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய இரண்டு பதவிக்கும் மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைவர் பதவியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதால் தலைவர் பதவிக்கான மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் ஹைதர். அதே போல, பொதுச்செயலாளர் பதவிக்கு ஹைதரை எதிர்த்து, சிலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
ஜவாஹிருல்லாவுக்காக தலைவர் பதவியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடிவு செய்ததுபோல, பொதுச்செயலாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹைதர் தரப்பினர் முன்வைத்திருக்கிறார்கள். இதில் சிலபல விவாதங்கள் எதிரொலித்தன.
இறுதியில் பொதுச்செயலாளர் ஹைதர் அலியையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்க முடிவெடுக்கப்பட்டது. ஆக, தலைவராக ஜவாஹிருல்லாவும், பொதுச்செயலராக ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications