காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு ரூ5 கோடி உதவி: முதல்வர் ஜெ.அறிவிப்பு
சென்னை: கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
60 ஆண்டுகாலத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அந்த மாநிலமே ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதுவரை மொத்தம் 180 பேர் பலியாகி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் வெள்ள சேதப் பகுதிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, அதனை தேசியப் பேரிடராக அறிவித்தார். அத்துடன் ரூ1000 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பகுதி இன்றுவரை தொடர்கிறது. வெள்ளத்தால் சிக்கியவர்களில் கடைசி மனிதனை மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என்று ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 5 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த உதவி வழங்கப்படுகிறது என்றும், தேவைப்பட்டால் கூடுதல் உதவிகள் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications