For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவின் 4வது கட்ட அமைப்புத் தேரதல்.. பொறுப்பாளர்களை அறிவித்தார் ஜெயலலிதா

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் 4வது கட்ட அமைப்புத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விழுப்புரம் முதல் அரியலூர் வரை 10 மாவட்டங்களில் அதிமுகவின் 4-வது கட்ட அமைப்புத் தேர்தல்கள் வரும் 23 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடைபெறும் என்றும் அதற்காக தேர்தல் பொறுப்பாளர்களாக நாடாளுமன்ற துணைசபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Jaya announces election functionaries for ADMK poll

இதுதொடர்பகாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்புத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, தற்போது மூன்றாம் கட்டத் தேர்தல்கள் நடந்துமுடிந்துள்ளன. இந்நிலையில், 4-ஆவது கட்டமாக வருகின்ற 23.ந்தேதி முதல் 27 ந்தேதி வரை விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, தருமபுரி,
சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள்; நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்; பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிகளுக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்களை நடத்திடும் வகையில், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்களாக, நியமிக்கப்படுகிறார்கள்.

அதே போல், மேற்கண்ட 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக நிர்வாகிகள், நகரக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கு வரும் மார்ச் 15 ந்தேதி முதல் 17ந்தேதி வரை நடைபெற உள்ள 9-ஆவது கட்டத் தேர்தல்களையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையாளர்களே நடத்துவார்கள். கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் மண்டலத் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தேர்தலை நடத்துவதற்காக பொறுப்பாளர்களாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

விழுப்புரம் வடக்குஃ அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர் ஆதிராஜாராம்.விழுப்புரம் தெற்கு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக மாணவர் அணி செயலாளருமானஎஸ்.ஆர்.விஜயகுமார்

தர்மபுரி - அதிமுக அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் கமலக்கண்ணன், சேலம் மாநகர் அதிமுக வழக்கறிஞர் அணித்தலைவர் சேதுராமன், சேலம் புறநகர், சுற்றுச்சூழல் அமைச்சரும் ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான தோப்பு வெங்கடாசலம்

நீலகிரி- வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், திருச்சி மாநகர் - தொழில்துறை அமைச்சர் தங்கமணி, திருச்சி புறநகர் - நாடாளுமன்ற துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை, பெரம்பலூர்- அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ.

அரியலூர் - பால்வளத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பி.வி.ரமணா ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும் ஒன்றிய தேர்தல் ஆணையாளர்களாக எம்.பிக்கள் எம்.எல் ஏக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
ADMK chief Jayalalitha has announced election functionaries for ADMK poll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X