தமிழக சட்ட ஆணைய உறுப்பினர்களை அறிவித்தார் ஜெயலலிதா
சென்னை: தமிழக சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
முதல்வர் ஜெயலலிதா மாநில சட்ட ஆணையத்தை திருத்தியமைத்து, மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதியரசர் என்.தினகரனை 27.01.2014 அன்று நியமித்து ஆணையிட்டிருந்தார். இந்த மாநில சட்ட ஆணையத்தின் பிற உறுப்பினர்கள் பின்னர் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

தற்போது, திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக, கீழ்க்கண்டோரை நியமித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்:-
நீதியரசர் டி.சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி முழுநேர உறுப்பினராகவும், ஆர்.விவேகானந்தன், சட்டத்துறை கூடுதல் செயலாளர் (ஓய்வு) முழுநேர உறுப்பினராகவும், ஆர்.தயாளன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பகுதிநேர உறுப்பினராகவும், ஆர்.முனிரத்தினம், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பகுதிநேர உறுப்பினராகவும், ஆர்.கதிர்வேல், சட்டத்துறை கூடுதல் செயலாளர்(ஓய்வு) முழுநேர உறுப்பினர் மற்றும் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications