கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டிய ஜெயலலிதா
கரூர்: கருரில் இன்று நடந்த அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு அதிமுகவினரும், பொது மக்களும் அதிக அளவில் வந்ததால் முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் செந்தில் பாலாஜியை பாராட்டியுள்ளார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருான ஜெயலலிதா இன்று மதியம் ஒரு மணி அளவில் கரூர் ராயனூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக அவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்து திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கரூர் வந்தார். கரூரில் முதல்வர் ஜெயலலிதாவை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி ஆகியோர் வரவேற்றனர்.
அடுத்து மேடையில் பேசிய ஜெயலலிதா பாஜகவை ஒரு பிடிபிடித்தார். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், மேலும் ஜெயலலிதாவை காண பெண்கள் கூட்டம் அதிக அளவில் பஸ், வேன், கார் பிடித்து அதிக அளவில் வந்தனர்.
இதனால் மேடை ஏறும் முன்பு கூட்டத்தைப் பார்த்த ஜெயலலிதா வழக்கத்தை விட மிகவும் உற்சாகமாக பேசினார். மேலும், அதிக அளவில் கூட்டத்தை கூட்டிய அமைச்சர் செந்தில் பாலாஜியையும் அவர் பாராட்டியதாக கூறப்படுகின்றது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications