மகத்தான வெற்றியே லட்சியம்… ஆர்.கே.நகரில் அனல் பறக்கும் பிரச்சாரம் தொடங்கினார் ஜெ
சென்னை: தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா கூறினார்.
ஜூன் 27ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜெயலலிதாவை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் இன்று பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா திருவொற்றியூரில் வாக்கு சேகரித்தார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களிடையே பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்றார். அரசியல் சதி காரணமாக சில காலம் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டதாகவும் அவர் கூறினார்.
யாரையும் குறை சொல்லி வாக்கு சேகரிக்க வரவில்லை. எங்களின் சாதனைகளை கூறியே வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களால் நான் மக்களுக்காகவே நான்எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்களின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேன். எனவே இந்த இடைத்தேர்தலை வரவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக கொண்டு வாக்களியுங்கள்.
உங்களின் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க என்று கூறி முடித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா பிரச்சாரத்தை காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications