அப்படியானால், தமிழகத்துக்கு யார் முதலமைச்சர்?: மு.க.ஸ்டாலின்
விழுப்புரம்: தமிழ்நாட்டிற்கு இனி ஜெயலலிதா ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது, ''இந்தியாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போன மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது உத்தரபிரதேசம். அடுத்ததுதான் தமிழகம். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் கூட 144 தடையுத்தரவு போடப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் போடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றாலும் தற்போது ஜெயலலிதா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது முதல்வராகியுள்ளார். ஆனால் அவர் முதலமைச்சர் அறைக்கு சென்று பணியாற்றவில்லை. அவர் அறையின் வாயிலிலும் நிதி அமைச்சர் என்றுதான் உள்ளது. அப்படியானால், தமிழகத்துக்கு யார் முதலமைச்சர்?.
தமிழகத்தில் ஒரு பொம்மை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சியில் அரசு நிர்வாகம் செயல்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுயஉதவி குழுவுக்கு கடன், வேலைவாய்ப்பு என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வங்கிக்கு சென்று கடன் கேட்டாலே மகளிர் வெளியேற்றப்படுகின்றனர். இந்த ஆட்சியில் முதியோர் உதவித்தொகையும் வழங்கப்படவில்லை. இப்படி அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளை சொல்ல முடியாது.
தமிழ்நாட்டில் இனி ஜெயலலிதா முதலமைச்சராக வர முடியாது. இது மக்கள் மன்றம் விதித்த தீர்ப்பு அல்ல. நீதிமன்றம் விதித்த தீர்ப்பு.
2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் கருணாநிதி முதல்வர் ஆவது உறுதி. இதை, தி.மு.க. பதவியில் அமர வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை.
இந்த ஆட்சியில் தமிழக மக்கள் இன்னல்களில் சிக்கி தவிக்கிறார்கள். அதில் இருந்து காப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன். 2016ல் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைக்க ஒவ்வொரு தொண்டனும் சபதம் ஏற்போம்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications