ஜெ. வழக்கில் அப்பீல்: நீதித்துறை மீதான நம்பிக்கையை காக்க வாய்ப்பு- குஷ்பு காரசாரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா அப்பீல் செய்ய உள்ளது குறித்து, குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, கர்நாடக ஹைகோர்ட்டால், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய அம்மாநில அரசு இன்று முடிவெடுத்துள்ளது.

Jaya case: Chance to restore the faith of the people in our Judiciary system: Khushboo

இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு "நாட்டு மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

இந்த டிவிட்டுக்கு அதிமுக விசுவாசிகள், எதிர்ப்பும், பிற கட்சியினர் வரவேற்பும் தெரிவித்து பதிலிட்டு வருகின்றனர். கர்நாடகாவிலும் காங்கிரஸ் அரசு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+