For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக 234 தொகுதி நிர்வாக அமைப்புகள் கலைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் கட்சி மனுக்கள் பரிசீலனைக்குழு ஆகியவை இன்று முதல் கலைக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதேபோல், 234 சட்ட மன்ற தொகுதிகளுக்கும், அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சட்ட மன்ற தொகுதி செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் முதலான நிர்வாக அமைப்புகளும் இன்று முதல் கலைக்கப்படுகின்றன என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Jaya dissolves constituency party set ups

அ.தி.மு.க.வில் இன்று பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அதாவது அ.தி.மு.க. பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். பல மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:

அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் அதிமுக மனுக்கள் பரிசீலனைக்குழு ஆகியவை இன்று முதல் கலைக்கப்படுகின்றன.

அதேபோல், 234 சட்ட மன்ற தொகுதிகளுக்கும், கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள சட்ட மன்ற தொகுதி செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் முதலான நிர்வாக அமைப்புகளும் இன்று முதல் கலைக்கப்படுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

English summary
CM jayalalitha has dissolved all th 234 constitueny party set ups
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X