ஓசூரைக் கைப்பற்றிய முதல் அதிமுக எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவியை பரிசளித்த ஜெ.!
சென்னை: தமிழக அமைச்சரவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ண ரெட்டி ஓசூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
ஓசூர் தொகுதி தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். கர்நாடக எல்லையில் உள்ள இந்த தொழில் நகரமானது, இதுவரை ஒருமுறை கூட திமுக, அதிமுக வேட்பாளர்களை சட்டசபைக்கு அனுப்பியதில்லை. மாறாக இது காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்து வந்தது.

இதன் காரணமாக, திமுக அதிமுக கட்சிகளும், இந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விடுவது வழக்கம். இந்த முறை அதிமுக இங்கு பாலகிருஷ்ண ரெட்டியை வேட்பாளராக நிறுத்தியது. தெலுங்கர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் பெரும்பாலும் தெலுங்கு மொழி பேசுவோர்தான் வெல்வது வழக்கம்.
இந்த தேர்தலில் காங்கிரஸின் செல்வாக்கைத் தகர்த்து அதிமுகவின் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தார். ஓசூர் தொகுதி உருவானது முதலே அங்கு வெற்றி பெறாத திராவிடக் கட்சிகளுக்கு அதிமுக மூலமாக இந்தத் தேர்தலில் முதல் வெற்றி கிட்டியது.
ஓசூர் தொகுதியில் கடந்த 3 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் கோபிநாத். அசைக்க முடியாத நபராக இருந்து வந்த அவரை ஆட்டிப் பார்த்தவர் பாலகிருஷ்ண ரெட்டி. இந்தத் தேர்தலில் பாலகிருஷ்ண ரெட்டி 89,510 வாக்குகளைப் பெற்றார். கோபிநாத் பெற்ற வாக்குகள் 65,034. 24,476 வாக்கு வித்தியாசத்தில் கோபிநாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றார் பாலகிருஷ்ண ரெட்டி.
பாலகிருஷ்ண ரெட்டி பிளஸ்டூ வரை படித்துள்ளார். 47 வயதான இவர் மீது ஒரு கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. இவரிடம் ரூ. 26.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக வேட்பு மனுவுடன் இவர் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு விவரம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில்தான் பாலகிருஷ்ண ரெட்டிக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. ஆனால் முதலில் அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் வரிசையில் அவரைச் சேர்க்காமல் அமைச்சர்கள் பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜெயலலிதா முடிவு செய்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.
ஏதாவது ராசி, சென்டிமென்ட் இருக்குமோ என்னவோ!
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications