சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தப்போ ஜெயா டிவிலேயும் ஜெயா பிளஸ்லேயும் என்ன போச்சு தெரியுமா?
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் தீர்ப்வு வழங்கிய போது அதிமுக ஆதரவு டிவி சேனல்களில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
சென்னை: சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அப்போது ஜெயல குரூப் தொலைக்காட்சிகளில் கைராசி குடும்பம் சீரியலும், எம்ஜிஆர் பாடல்களும் ஒளிப்பரப்பட்டன.
ஒட்டு மொத்த இந்தியாவும் பரபரப்பாக எதிர்ப்பார்த்த சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது. இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 3 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தனர்.

தீர்பை கண்டுகொள்ளாத ஜெயா சேனல்கள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் தீர்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டன. அப்போது அதிமுக ஆதரவு டிவி சேனல்களான ஜெயா டிவி குரூப் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன்பாட்டுக்கு வேலை செய்தது.

சசியின் பேச்சு ரீடெலிகாஸ்ட்
ஜெயா டிவி, ஜெயா பிளஸ் மற்றும் ஜெயா மேக்ஸில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.ஜெயா பிளஸ் தொலைக்காட்சி எதையும் கண்டுகொள்ளாமல் சசி நேற்று பேசியதையே திருப்பி திருப்பி ஒளிப்பரப்பியது.

சீரியல் பக்கம் திரும்பிய ஜெயா டிவி
ஜெயா டிவி கொஞ்சமும் அசராமல் கைராசி குடும்பம் சீரியலை டெலிகாஸ்ட் செய்தது. அதேபோல் அவர்களின் மியூசிக் சேனலான ஜெயா மேக்ஸ் எம்ஜிஆர் பாடல்களை ஒளிப்பரப்பியது.

தீர்ப்பு செய்தியே இல்லையே
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து ஜெயா குரூப் தொலைக்காட்சிகளில் ஒரு வரிக்கூட செய்தி போடாமல் இருந்தது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications