அப்பல்லோவில் இருந்து இன்று வீடு திரும்புகிறார் ஜெ.,?: தொண்டர்கள் உற்சாகம்
சென்னை : உடல்நலக்குறைவினால் கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, இன்று வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவ மனையில் கடந்த 22ம் தேதி நள்ளிர வில் அனுமதிக்கப்பட்டார். அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்தது. இதையடுத்து அவருக்கு அன்றைய தினமும், மறுநாள் 23ம் தேதி அன்றும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து முதல்வர் வழக்கமான உணவுகளை சாப்பிடத் தொடங்கினார். தொடர்ந்து முதல்வர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சமூக வலைத் தளங்களில் முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவின. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் தொடர்ந்து கோவில்களில் பிராத்தனை, சிறப்பு யாகங்கள் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவர்கள், சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அடிப்படை ஆதாரமற்றவை. முதல்வரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. மருத்துவ சிகிச்சைகளை முதல்வர் நல்ல முறையில் ஏற்று வருகிறார்.
முதல்வர் பூரண நலம் பெற இன் னும் சில தினங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டுமென்று அறி வுறுத்தி இருக்கிறோம். எனவே, இன்னும் சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று ஞாயிறு மாலையில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதால் அதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை முதல் ஆரம்பித்து விட்டது. போயஸ் தோட்டத்தில் அவர் ஓய்வு எடுக்க சிறப்பு மருத்துவ ஏற்பாடுகளை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் செய்துள்ளனர். இன்று எந்த நேரமும் அவர் மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்ட வீட்டிற்குத் திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications