ஜெயலலிதாவை சந்தித்த அதிமுகவின் 50 மாவட்ட செயலாளர்கள்: 'தீ'யாய் செயல்பட அறிவுரை
சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்று ஆசி வழங்கினார் ஜெயலலிதா.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், ஜெயலலிதாவை இன்று (12.10.2015 - திங்கட் கிழமை), புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முதல்வர் ஜெயலலிதா, மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, கட்சிப் பணிகள் சிறக்க மீண்டும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

50 மாவட்ட செயலாளர்கள்
தமிழ்நாட்டில் கட்சி ரீதியாக உள்ள 50 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 7ம்தேதி அறிவித்திருந்தார்.
வடசென்னை வடக்கு - பி. வெற்றிவேல் (முன்னாள் எம்.எல்.ஏ.), வடசென்னை தெற்கு - கே.எஸ்.சீனிவாசன் (முன்னாள் எம்.எல்.ஏ.), தென் சென்னை வடக்கு - சத்தியநாராயணன் என்கிற தி.நகர் பி. சத்தியா (மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர்), தென்சென்னை தெற்கு - ஜி. செந்தமிழன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் கிழக்கு - அமைச்சர் டி.கே.எம். சின்னையா, காஞ்சிபுரம் மத்தி - தண்டரை கே. மனோகரன் (எம்.எல்.ஏ.), காஞ்சிபுரம் மேற்கு - வாலாஜாபாத் பா. கணேசன் (எம்.எல்.ஏ.).
திருவள்ளூர் கிழக்கு - சிறுணியம் பி. பலராமன், திருவள்ளூர் மேற்கு அமைச்சர் பி.வி. ரமணா, வேலூர் கிழக்கு - வி.ராமு (விவசாய பிரிவுச் செயலாளர்), வேலூர் மேற்கு - அமைச்சர் கே.சி. வீரமணி.
திருவண்ணாமலை வடக்கு - அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், திருவண்ணாமலை தெற்கு - பெருமாள் நகர் கே. ராஜன் (மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்), கடலூர் கிழக்கு - அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூர் மேற்கு - ஆ. அருண்மொழிதேவன் (எம்.பி.), விழுப்புரம் வடக்கு - ஆர். லட்சுமணன் (எம்.பி.), விழுப்புரம் தெற்கு - கதிர். தண்டபாணி (ஒன்றிய செயலாளர்).
கிருஷ்ணகிரி - வி. கோவிந்தராஜ் (முன்னாள் எம்.எல்.ஏ.), தர்மபுரி - பூக்கடை எம். முனுசாமி (ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்), சேலம் மாநகர் - எம்.கே. செல்வராஜு (எம்.எல்.ஏ.), சேலம் புறநகர் - அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நாமக்கல் - அமைச்சர் பி. தங்கமணி.
ஈரோடு மாநகர் - பி.வி. சிவசுப்பிரமணி (மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்), ஈரோடு புறநகர் - அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், திருப்பூர் மாநகர் - அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் புறநகர் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமன்.
கோவை மாநகர் - பி.ஆர்.ஜி. அருண்குமார் (மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்), கோவை புறநகர் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நீலகிரி - கே.ஆர். அர்ஜுனன் (எம்.பி.), திருச்சி மாநகர் - தலைமை கொறடா ஆர்.மனோகரன், திருச்சி புறநகர் - டி.ரத்தினவேல் (எம்.பி.), பெரம்பலூர் - ஆர்.டி. ராமச்சந்திரன் (நகர செயலாளர்), அரியலூர் - தாமரை எஸ். ராஜேந்திரன், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர் (ஒன்றிய செயலாளர்), தஞ்சாவூர் வடக்கு - எம். ரங்கசாமி (எம்.எல்.ஏ.).
தஞ்சாவூர் தெற்கு - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நாகப்பட்டினம் - அமைச்சர் கே.ஏ.ஜெயபால், திருவாரூர் - அமைச்சர் ஆர். காமராஜ், புதுக்கோட்டை - அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மதுரை மாநகர் - அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மதுரை புறநகர் - மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, தேனி - டி.டி. சிவக்குமார் (நகர மன்றத் தலைவர்), திண்டுக்கல் - அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன்.
விருதுநகர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, சிவகங்கை - பிஆர். செந்தில் நாதன் (எம்.பி.), ராமநாதபுரம் - ஆர். தர்மர், திருநெல்வேலி மாநகர் - எஸ். முத்துக்கருப்பன் (எம்.பி.), திருநெல்வேலி புறநகர் - ஆர். முருகையாபாண்டியன் (வீட்டு வசதி வாரியத் தலைவர்), தூத்துக்குடி - அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கன்னியாகுமரி- என்.தளவாய் சுந்தரம் (முன்னாள் அமைச்சர்) ஆகிய 50 மாவட்ட செயலாளர்களும் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற்றனர்.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி











Click it and Unblock the Notifications