முகம் முழுக்க பெயிண்ட் அடித்த வித்தியாசத் தொண்டர்கள்.. கூப்பிட்டு கிப்ட் கொடுத்த ஜெ.!
சென்னை: தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டு போயஸ் தோட்டம் திரும்பிய ஜெயலலிதா. தம்மை வித்தியாசமாக வரவேற்ற தொண்டர்களை வீட்டுக்கு அழைத்து குரூப் போட்டோ எடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பியிருக்கிறார்.
தமிழகத்தின் முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னையில் முகாமிட்டு இருந்தனர்.

இன்று காலை ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டு போயஸ் தோட்டத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போயஸ் கார்டன் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை அதிமுக தொண்டர்கள் 15 பேர் அனைவரையும் கவரும் வகையில் உடல்களில் அ.தி.மு.க. கொடி வண்ணத்தை பூசியபடி வித்தியாசமாக நின்று ஜெயலலிதாவை வரவேற்றனர்.

இதை அந்த வழியாக கடந்து சென்ற ஜெயலலிதா பார்த்தார். பின்னர் வீட்டுக்கு சென்றதும் அந்த தொண்டர்களை அழைத்து வரும்படி ஜெயலலிதா கூறினார்.
போயஸ் தோட்டத்துக்குள் சென்ற தொண்டர்களிடம் முதல்வர் ஜெயலலிதா சிறிது நேரம் பேசிவிட்டு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு ஒரு கவரில் பண பரிசு கொடுத்தும் அனுப்பினாராம்..

ஜெயலலிதாவின் எதிர்பாராத இந்த நடவடிக்கையால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துப் போயுள்ளனர்...
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications