இன்று தஞ்சையில் ஒரே நேரத்தில் ஜெ., ஸ்டாலின் பிரச்சாரம்: பரபரக்கும் கட்சியினர்
தஞ்சாவூர்: முதல்வர் ஜெயலலிதா இன்று தஞ்சையில் பிரச்சாரம் செய்யும் அதே நேரத்தில் அங்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் தான் உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அப்போது தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் 18 அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை வருகிறார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி தஞ்சையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் கூட்டம் நடக்கும் அதே நேரத்தில் தஞ்சையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிக்க உள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சை மற்றும் திருவையாறில் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின் இன்றும் தஞ்சையில் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதாவும், ஸ்டாலினும் ஒரே நேரத்தில் தஞ்சையில் பிரச்சாரம் மேற்கொள்வதால் அங்குள்ள கட்சியினர் பரபரப்பாக காணப்படுகிறார்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications