வீட்டிலிருந்தபடியே ... தேவர் படத்துக்கு ஜெயலலிதா அஞ்சலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் திரும்பியுள்ள ஜெயலலிதா, போயஸ் கார்டன் வீட்டிலேயே இருந்து வருகிறார். வெளியில் அவர் வருவதில்லை. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தைக் கூட அவர் நேற்றுதான் முதல் முறையாக சந்தித்துப் பேசினார்.

Jaya pays tribute to Thevar

இந்த நிலையில் தனது வீட்டில் இருந்தபடியே முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்துள்ளார் ஜெயலலிதா. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேவர் திருமகனாரின் 107வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் "மக்கள் முதல்வர்" ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+