"அம்மா" 35 வருடமாக பத்திரமாக வைத்திருக்கும் "அம்பாசடர்" கார் எங்கே?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலையாகிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்த விவரம் மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா தேர்தல் விதிமுறைப்படி தனது சொத்துக்கள் குறித்த கணக்கையும் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த முறை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது இருந்த சொத்துக்களை விட இரண்டு மடங்கு சொத்து மதிப்பு தற்போது அதிகமாகியுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக் கணக்கில் உள்ள சில முக்கிய அம்சங்கள்...
- 2013-2014-ம் ஆண்டு வங்கி கணக்குப்படி மொத்த வருமானம் ரூ.33,22,730.
- ஜெயலலிதா கையில் தற்போது இருக்கும் ரொக்கப் பணம் ரூ.39,000.
- ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் சேமிப்பு தொகை ரூ.9,80,09,639.
- சொத்துக் குவிப்பு வழக்கில் முடக்கப்பட்ட தொகை ரூ.2,47,74,945
- 5 நிறுவனங்களில் தொழில் முதலீட்டு தொகை ரூ.31,68,82,808.
- வெள்ளி பொருட்கள் 1250 கிலோ. இதன் மதிப்பு - ஒரு கிலோவுக்கு ரூ.25,000 என மொத்தம். ரூ. 3,12,50,000.
- வழக்கில் முடக்கப்பட்ட தங்க நகைகளின் அளவு 21,280.300 கிராம் ஆகும்..
- காஞ்சீபுரம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள விவசாய நிலங்களின் மதிப்பு ரூ.14,78,37,300
- சென்னை போயஸ் கார்டன், மந்தைவெளி, தேனாம்பேட்டை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள வணிக கட்டிடங்களின் மதிப்பு ரூ.13,34,70,990.
- ஜெயலலிதா வசித்து வரும் போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு ரூ.43,96,74,900.
- ஒட்டுமொத்த அசையா சொத்தின் மதிப்பு ரூ.72,9,83,190. அசையும் சொத்தின் மதிப்பு ரூ.45,4,06,447.
- மொத்த வங்கி கடன் மதிப்பு ரூ.2,04,02,987.
- ஜெயலலிதாவிடம் உள்ள கார்கள் - 2 டோயோட்டா, 1980-ம் ஆண்டு மாடல் அம்பாசிடர், 1990-ம் ஆண்டு கான்டசா உள்பட மொத்தம் 9 கார்கள்.
- ஜெயலலிதாவிடம் உள்ள கார்களின் மதிப்பு ரூ.42,25,000 ஆகும்.
எல்லாம் சரி தனது பழைய அம்பாசடர் காரை தொடர்ந்து ஜெயலலிதா பயன்படுத்துகிறாரா என்பது தெரியலையே..!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications