அதிமுகவினரே.. உடனே சுவர் விளம்பரம், போஸ்டர்களில் திருத்தம் பண்ணுங்க.. "அம்மா" வயது 69!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகமெங்கும் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாட அதிமுகவினர் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். அவரது 68வது பிறந்த நாள் பிப்ரவரி 24ம் தேதி வருகிறது. இந்த நிலையில் இது தனக்கு 69வது பிறந்த நாள் என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கியுள்ளார்.

சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறிப் பேசினார் இந்தியக் குடியரசுக் கட்சி உறுப்பினர் செ.கு. தமிழரசன். அப்போது அவர் முதல்வருக்கு 68வது வயது பிறக்கிறது என்று அவர் கூறியபோது, சிரித்தபடி குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, இல்லை, எனக்கு 68 முடிந்து 69 வயது பிறக்கிறது என்று திருத்தினார்.

Jaya says she is turning 69

இதைக் கேட்ட தமிழரசனும், தனது பேச்சில் திருத்தம் செய்து 69வது அகவையில் அடி எடுத்து வைக்கும் முதல்வருக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

இருப்பினும் தமிழகமெங்கும் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் என்றுதான் அதிமுகவினர் சுவர் விளம்பரம் செய்துள்ளனர், போஸ்டர் அடித்து வருகின்றனர், டிஜிட்டல் பேனர்களையும் வைத்து வருகின்றனர். இப்போது அத்தனையையும் மாற்றியாக வேண்டும்.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+