Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனவர்களை மீண்டும் கைது செய்வதா? விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jaya Slams Fresh Arrest of Fishermen
சென்னை: கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படும் விஷயத்தில் உறுதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலமே, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை சுமுகமான முறையில் நடத்த முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் உள்ள மீனவர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மேலும், இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெறுவதற்கு வசதியாக எனது உத்தரவின்படி தமிழகச் சிறைகளிலுள்ள இலங்கை மீனவர்களோடு அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 275 பேர் மற்றும் அவர்களுடைய 84 படகுகளை விடுவிக்க வேண்டும் என்று எனது அரசு கோரிக்கை விடுத்தது.

இரு நாட்டு மீன்வர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் சூழலில் அந்தப் பேச்சு இணக்கமான முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக நல்லெண்ண அடிப்படையில் எனது கோரிக்கை ஏற்கப்பட்டது.

மேலும், தமிழகச் சிறைகளில் இருந்து இதுவரை 130 இலங்கை மீனவர்களும் அவர்களின் ஏழு படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், இலங்கைக் கடற்படை மீண்டும் தனது கொடூரச் செயலைச் செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் மற்றும் அவர்களுடைய ஆறு இயந்திரப் படகுகளை இலங்கைக் கடற்படையினர் 21 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) பிடித்துச் சென்றுள்ளனர். பாக் ஜல சந்தி கடல் பகுதியில் அவர்கள் தங்களது பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இந்தக் கைது சம்பவம் நடந்துள்ளது.

இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், தமிழக மீனவர்கள் கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தச் சம்பவம், தமிழகத்தில் உள்ள மீனவ சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும். இலங்கைக் கடற்படையின் இந்த மூர்க்கத்தனமான செயல் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைச் சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாமல் 64 தமிழக மீனவர்களும், அவர்களுடைய 69 படகுகளும் உள்ளன என்பதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் தங்களுடைய தனிப்பட்ட முறையிலான தலையீடு நிச்சயம் தேவை. மேலும், ஏற்கெனவே சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களும், அவர்களுடைய படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

எனவே, மீனவர்கள் விடுவிக்கப்படும் விஷயத்தில் உறுதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலமே, இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை சுமுகமான முறையில் நடத்த முடியும் என் தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+