அந்த 10 நிமிடங்கள்.. ஜெயலலிதாவின் பரபர விளக்கம்.. 'பவர்' குறித்து!
சென்னை: சென்னையில் நடந்த 14வது நிதிக் குழு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் மின் நிலைமை குறித்து 10 நிமிடங்களுக்கு புள்ளிவிவரங்களை அடுத்தடுத்து எடுத்து வைத்து விரிவாகப் பேசி அனைவரையும் கவர்ந்து விட்டார்.
இத்தனைக்கும் எந்தவிதமான குறிப்பையும் அவர் கைவசம் வைத்துக் கொள்ளாமல் பேசி அசத்தியுள்ளார்.
இந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே தமிழகத்தின் மின்சார நிலைமை, மின் பற்றாக்குறை, உற்பத்தி நிலவரம், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் விளக்கி முடித்து விட்டார்.

அந்த 10 நி்மிடங்கள்
முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் மின் நிலவரம் குறித்து பத்து நிமிடங்களுக்கு புள்ளிவிவரங்களுடன் பேசினார்.

மத்திய அரசு மீது கடும் பாய்ச்சல்
இந்தப் பேச்சின்போது தமிழகத்தில் மத்திய அரசு திட்டமிட்டே மின் தடைகளை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார் அவர்.

அழுத்தம் திருத்தமாக
நிதிக்குழு அதிகாரிகள் பேசியபோது அவ்வப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் தேவைகள் பற்றிய கோரிக்கைகளையும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்.

குறிப்பே இல்லாமல் கலக்கிய ஜெயலலிதா
தனது விளக்கத்தையும், கோரிக்கையையும் அவர் எடுத்து வைத்தபோது எந்தவித குறிப்பையும் கையில் வைத்துக் கொள்ளாமல் மனதிலிருந்ததை அப்படியே விளக்கி விரிவாகப் பேசியது குழுவின் தலைவர் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தியதாம்.

அடுக்கடுக்காக அதிரடிப் பேச்சு
மேலும் மின் நிலைமை, மின் பற்றாக்குறை, தேவை, உற்பத்தி உள்ளிட்டவை குறித்து அவர் புள்ளிவிவரங்களை அப்படியே அழகாக எடுத்து வைத்தவிதமும் அனைவரையும் கவர்ந்திழுத்து விட்டதாம்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications