சொன்னதை செய்யாதவர்கள் திமுகவினர்.. நான்தான் செய்தேன்.. கோவையில் ஜெ. பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுகவினர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுக அரசு மீது பொய் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று கோவையில் உள்ள கொடீசியா மைதானத்தில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

Jaya targets DMK and its false promises in Coimbatore meet

அப்போது அவர் கூறுகையில்,

  • அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, அம்மா மருந்தக திட்டங்களை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
  • ஒரு தாய்க்கு தான் தனது பிள்ளைகளுக்கு என்ன தேவை என்று தெரியும்
  • ஒரு தாய்க்கு தான் தனது பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அதை எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என தெரியும்
  • நான் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்துவேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்
  • என் ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை அளித்துள்ளது
  • தமிழகம் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்
  • நொய்யல் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது
  • பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது
  • 20 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, 7 இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன
  • கேரளாவில் 7 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
  • தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • கேரளாவில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேரள வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன்
  • அதிமுகவினர் மீது சில இடங்களில் சிபிஎம் ஆட்கள் தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
  • மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற தாரகமந்திரத்தை கடைபிடித்து வாழ்கிறேன்
  • உங்களால் நான், உங்களுக்காகவே நான்
  • உங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது தான் என் தவ வாழ்வு
  • நான் சொன்னதையும் செய்தேன், சொல்லாததையும் செய்தேன்
  • அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்
  • பல அரசியல் கட்சி தலைவர்களும் மது விலக்கு பற்றி பேசி வருகிறார்கள்
  • நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
  • படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்
  • முதல் கையெழுத்தே மதுவிலக்கிற்கு தான் என கருணாநிதி தெரிவித்தார்
  • அதை மாற்றி மதுவிலக்கு தொடர்பாக சட்டம் இயற்றுவோம் என்றும் கூறியுள்ளார்
  • கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்
  • மதுவிலக்கு கொள்கையில் திமுகவுக்கு அக்கறைை இல்லை
  • மதுவிலக்கு பற்றி பேசி வாக்கு பெற முடியுமா என திமுக பார்க்கிறது
  • தமிழகத்தில் முதன்முதலாக உலக முதலீ்ட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது
  • வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து பலருக்கு வேலை கிடைத்துள்ளது
  • திரு. கருணாநிதியும், அவரது மகனும் அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியே இல்லை என்று கூறி வருகின்றனர்
  • 10 மணிநேரம் மின்வெட்டு இருந்த திமுக ஆட்சியில் எப்படி தொழில் வளர்ச்சி ஏற்பட்டிருக்க முடியும்?
  • கருணாநிதியும், ஸ்டாலினும் கூறி வரும் தொழில் வளர்ச்சி அவர்களின் குடும்ப தொழில் வளர்ச்சி
  • தமிழகத்தில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டு கோடி, கோடியாக சுருட்டியவர்கள் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தார்கள்
  • திமுக ஆட்சியில் புதிய மதுபான தொழிற்சாலைகள் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது
  • அது போன்று என் ஆட்சியில் அனுமதி அளிக்கப்படாததால் தொழில் வளர்ச்சி இல்லை என்கிறாரோ?
  • 2011ம் ஆண்டில் நான் ஆட்சிக்கு வந்த பிறகு மின்சாரம் தொடர்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன
  • திமுகவினர் வாக்கு கேட்டு உங்களிடம் வருவார்கள்
  • அதிமுக அரசு எதையுமே செய்யவில்லை என கூசாமல் பொய் சொல்வார்கள்
  • அப்போது மீண்டும் மின்வெட்டால் வாடுவதற்கு உங்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என கேட்டு விரட்டுங்கள்
  • செய்வீர்களா? செய்வீர்களா?
  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலம்
  • மொத்த ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாவது மாநிலம்
  • எனது ஆட்சியில் 14 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன

  • கருணாநிதியும், திமுகவினரும் வாக்கு கேட்டு வருகையில் அவர்கள் செய்த ஊழல்களை சொல்லி விரட்டியடியுங்கள்
  • செய்வீர்களா? இதை செய்வீர்களா?
  • திமுக ஆட்சியில் எப்படிப்பட்ட மின்வெட்டுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டீர்கள் என்பதை யாரும் மறந்துவிட முடியாது
  • மின்வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர்
  • குறிப்பாக மாணாக்கர்கள் மின்சாரம் இல்லாததால் படிக்க முடியாமல் தவித்தனர்
  • இப்படிப்பட்ட சூழலில் தான் இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும் என்று 2011ம் ஆண்டு வாக்குறுதி அளித்தேன்
  • அதன்படி தமிழகம் ஒளிமயமாக்கப்பட்டுள்ளது.
  • இன்று மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை

  • திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்களுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை
  • கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தியது என் தலைமையிலான அதிமுக அரசு தான்
  • திமுக அளித்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது
  • உதகை, ஏற்காடு, கொடைக்கானலில் கேபிள் கார் அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
  • நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
  • வாக்குகளை பெற கருணாநிதி எந்த வாக்குறுதியையும் அளிப்பார்
  • தனக்கும், தனது குடும்பத்திற்கும் பயனளிக்காத எந்த வாக்குறுதியையும் கருணாநிதி நிறைவேற்ற மாட்டார்.
  • காங்கிரஸ்- திமுக கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி
  • நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்து மக்களால் தண்டிக்கப்பட்ட கூட்டணி காங்கிரஸ்- திமுக கூட்டணி
  • திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருக்கையில் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது
  • கருணாநிதியும், திமுகவினரும் உத்தமர் போல பேசி மக்களை ஏமாற்றிவிடலாம் என பகல் கனவு காண்கிறார்கள்
  • இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான்
  • வீராணம் ஊழல், நில அபகரிப்புகள், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை என அனைத்திலும் ஊழல் இருந்தது திமுக ஆட்சியில் தான்
  • 2ஜி ஸ்பெக்ட்ரம் என இமாலய ஊழலை செய்தது திமுக அமைச்சர் தான்

  • ஊழல் என்றாலே கருணாநிதி, கருணாநிதி என்றாலே ஊழல் என்பது கூறும் அளவுக்கு உள்ள அவர் ஊழலற்ற ஆட்சியை தருவாரா?

  • தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகவின்
  • தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன்
  • நான் சொன்னதையும் செய்தேன், சொல்லாததையும் செய்தேன்
  • நீங்களே நினைத்துப் பார்க்காத பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம்
  • அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா சிமெண்ட்
  • என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்
  • அம்மா குழந்தைகள் நல பெட்டகம், மகளிருக்கு விலையில்லா நாப்கின் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்
  • திமுகவினர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
  • மண்டல தாவரவியல் வாரியம், பயிற்சி மையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை
  • சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இங்கு வந்துள்ளேன்
  • தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ள வைக்க வேண்டும்
  • உங்கள் ஆதரவால் நான் முதல்வராக பெறுப்பேற்றேன்
  • இந்த நல்லாட்சி தொடர அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்
  • இன்று மே தினம், தொழிலாளர் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
  • தொழிலாளர்களின் நிலை உயர எனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்
  • பிரச்சாரத்திற்காக கோவை கொடீசியா மைதானத்திற்கு வந்தார் ஜெயலலிதா
  • ஜெயலலிதாவை காண குவிந்த லட்சக்கணக்கான மக்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+