உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன்... ஜெ. உருக்கமான கடிதம்
சென்னை: சட்டசபை பொதுத்தேர்தலில், இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றாக வேண்டும். வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள் என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடநாடு சென்றார். அங்கிருந்து தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடிதம் வழியாக சந்திப்பு
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!
இந்திய அரசியல் வானில் தன்னிகரற்ற பேரியக்கமாக ஒளி வீசிக்கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் 44-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, என் உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை, எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, இந்த மடல் வழியாகச் சந்திப்பதில் பேருவகை அடைகிறேன்.

மாபெரும் மக்கள் இயக்கம்
`தீய சக்தியின் அராஜகத்திற்கும், ஊழலுக்கும், சூறையாடலுக்கும், ஒழுக்கக்கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்களால் மட்டும் தான் முடியும்‘ என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருமித்த குரலில் விடுத்த அழைப்பை ஏற்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் தான் அ.தி.மு.க.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
தீய சக்தியின் கொடூரமான அடக்குமுறை, வன்முறை வெறியாட்டம் ஆகியவற்றை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து, இந்த இயக்கத்தை கண்ணின் மணி என்று காத்தார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு, நமது இயக்கத்தை அழித்துவிடத் துடித்த நம் அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகளையும், சொல்லொண்ணா சூழ்ச்சிகளையும், சதிகளையும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் சந்திக்க நேர்ந்தது.

சோதனைகளில் வெற்றி
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இந்த ஒளி விளக்கை அணையாது காக்க வேண்டும். இது என்றென்றும் மக்களின் இயக்கமாகத் திகழ வேண்டும் என்பதற்காக நான் அனைத்து சோதனைகளையும் மன உறுதியுடன் ஏற்றுக்கொண்டு உங்களுக்காக, தமிழக மக்களுக்காகப் பாடுபட்டு வருகிறேன்.

வாழ்க்கையே நீங்கள்தான்
எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத் தான்; தமிழக மக்களுக்காகத் தான். ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.

உங்களுக்காகவே என் உயிர்
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

அதிமுக ஆண்டு விழா
எனது தலைமையிலான அரசு மகத்தான சாதனைகளை மக்களுக்கு அளித்து, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உயர்வடையச் செய்துவரும் மன நிறைவோடு அ.தி.மு.க.வின் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகின்ற மன நிறைவோடு இந்த ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம்.

அரசியல் வெற்றி
அ.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு அரசியல் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அடுத்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றாக வேண்டும்.

ஆண்டு விழா கொண்டாட்டம்
அதுவே நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.-க்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, சூளுரை ஏற்கும் தருணமாக இந்த ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் அமைந்திட வேண்டும். உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசு, துறை தோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப்பணிகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

பெருமை சேர்க்கும் பணி
அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்குத் தொண்டாற்றுங்கள். பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய கழக நிர்வாகிகளும், கழக நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் உடன் பிறப்புகளும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள். அ.தி.மு.க.விற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும்.

வெற்றி ஒன்றே குறிக்கோள்
வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள். புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும். வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்திலேயே தொடங்கிடுவீர் என்று உங்கள் அனைவருக்கும் அன்புக் கட்டளை இடுகிறேன்.
அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! உங்கள் அன்புச் சகோதரி என்று முதல்வர் ஜெயலலிதா எழுதி உள்ளார்.
-
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications